×
 

பாஜகவுக்கு ஆதரவாக SIR பணிகள்... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய காங். MLA...!

பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறுவதாக காங்கிரஸ் எம் எல் ஏ அம்பலப்படுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர்.

அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: SIR படிவத்தை நிரப்பாவிட்டால்... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு...!

தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகள் நடைபெறுவதாக வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும் போது பாஜக ஆதரவாளர் உடன் இருந்த சம்பவத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: இதனால பெரிய குழப்பம்... சும்மா கணக்கு காட்டுறாங்க..! SIR விவகாரத்தில் NR இளங்கோ காட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share