×
 

நான் சிவ பக்தன்... விஷத்தையும் எடுப்பேன்! பிரதமர் மோடி கொந்தளிப்பு

நான் சிவபக்தன்., விஷத்தையும் எடுப்பேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அசாம் சென்ற அவர், பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டார். இன்று தர்ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன்முதலாக அசாம் வந்துள்ளேன். காமாக்யா அன்னையின் ஆசிர்வாதத்தால் ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும் என்னை எவ்வளவு தான் திட்டினாலும் தாங்கிக் கொள்வேன் நான் சிவபெருமானின் பக்தன் என்றும் கூறினார்.

அவதூறுகளின் விஷத்தை அருந்தி அதை எடுத்து விடுவேன் என்றும் ஆனால் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார். இதனிடையே, பிரதமர் மோடி கோளகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஐந்தாயிரம் கோடிக்கு மேல் புதிதாக கட்டப்பட்ட மூங்கில் அடிப்படையில் எத்தனை நாள் ஆலையையும் பெட்ரோ திரவமாக்கப்பட்ட பட்டாசு அலகுகளையும் திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு இந்தியா பதிலடி!! மோடிக்கு நன்றி சொன்னார் இஸ்ரேல் பிரதமர்!

அனைத்தையும் சேர்த்து அசாமில் 18,530 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பீகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்!! ராகுல் காந்தி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share