×
 

#BREAKING: மீண்டும் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும்... பாகிஸ்தானுக்கு ஓபன் வார்னிங் கொடுத்த மோடி..!

வர்த்தகத்தை காரணம் காட்டி தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்ட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றி பெறச் செய்துள்ளது. முப்படைகளும் மிக வீரியமாக செயல்பட்டு பெரும் ஆபத்தை தவிர்த்தனர். அப்பாவி மக்களை கொன்ற பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை நமது வீரர்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர். இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்பிற்கும் சல்யூட். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இதையும் படிங்க: தீவிரவாத நடவடிக்கை எதிர்ப்பு..! இந்தியா - பாக். இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்..!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இந்த ஆபரேஷன் நடவடிக்கையின் மூலம் நமது வீரர்கள் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி பெற செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் இருக்கும். இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையகங்கள் தகர்க்கப்பட்டன.

தாக்குதல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றுள்ளோம். ஒரே தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கோவில்கள், குருத்துவார்கள், பள்ளிகளை குறி வைத்து கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி தகர்த்தன. தாக்குதலில் இருந்து தப்பிக்க உலக நாடுகளிடம் மண்டியிட்டு கெஞ்சியது பாகிஸ்தான் என்று பிரதமர் மோடி பேசினார். எதிர்காலத்தில் தங்களிடம் மீண்டும் வாலாட்டினால் பதிலடி இதைவிட பயங்கரமாக இருக்கும். இந்தியாவின் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளே அழிப்பதில் முக்கிய பங்காற்றின. தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு. போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது., தாக்குதல் தொடர்ந்தால் பதிலடி பயங்கரமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையும் படிங்க: போர் பதற்றத்தில் மூடப்பட்ட விமான நிலையங்கள்..! முன்கூட்டியே திறக்க அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share