உலகிலேயே நம்பர் 1!! மீண்டும் சாதித்த மோடி!! பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 2ம் ஆண்டாக முதலிடம்!
உலகின் பிரபலமான தலைவர்கள் குறித்து அமெரிக்கா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் முக்கிய தலைவர்களின் செல்வாக்கு மற்றும் ஆதரவை மதிப்பீடு செய்யும் சர்வதேச கருத்துக்கணிப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தரவு பகுப்பாய்வு நிறுவனம் மார்னிங் கன்சல்ட் (Morning Consult) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதம் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின் படி, நரேந்திர மோடி (Narendra Modi) 68 சதவீத ஆதரவுடன் உலகின் மிக பிரபலமான தலைவராகத் திகழ்கிறார். இது அவரின் உள்நாட்டு ஆட்சி திறன் மற்றும் சர்வதேச அரங்கில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில், சுவிட்சர்லாந்து தலைவர் அலைன் பெர்செட் (Alain Berset) 62 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதே அளவு ஆதரவுடன் தென்கொரிய தலைவர் லீ ஜேம் யுங் (Lee Jae-myung) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) 39 சதவீத ஆதரவு மட்டுமே பெற்று 14வது இடத்தில் உள்ளார். மேற்காசியப் பகுதியில் ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகள் காரணமாக அவரது செல்வாக்கு குறைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) 24 சதவீத ஆதரவு, ஜெர்மனி தலைவர் Friedrich Merz 20 சதவீத ஆதரவு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் (Emmanuel Macron) 17 சதவீத ஆதரவு பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்த ஆய்வில், 26 சதவீதம் பேர் தலைமைத்துவத்தை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், 6 சதவீதம் பேர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் விலகியுள்ளனர்.
மொத்தத்தில், நரேந்திர மோடி (Narendra Modi) தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதலிடம் பிடித்திருப்பது, இந்தியாவின் சர்வதேச செல்வாக்கு அதிகரித்திருப்பதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நெருக்கடி..!! சிலிண்டர் தட்டுப்பாடு... ஓட்டல்கள் சங்கம் பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம்..!!