×
 

தனியார் ராக்கெட் ஏவும் திறன் கொண்ட 3வது நாடு இந்தியா..! விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

விக்ரம் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

விக்ரம் 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கும் நிலைகள் விஞ்ஞானிகள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்திய விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதலாவது தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ராக்கெட் விக்ரம்-1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த ராக்கெட், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. 'மிஷன் ஆகமன்' என்று பெயரிடப்பட்ட இந்த முதல் சோதனைப் பயணம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு ஏவப்பட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ராக்கெட் 12.05 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. 

விக்ரம்-1 ராக்கெட், இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது சுமார் 20 மீட்டர் உயரம் கொண்ட நான்கு நிலை ராக்கெட் ஆகும். முழுமையாக கார்பன் காம்போசிட் பொருட்களால் உருவாக்கப்பட்ட இதன் அமைப்பு இலேசான எடையையும் அதிக வலிமையையும் தருகிறது. முதல் மூன்று நிலைகள் திட எரிபொருள் உந்து அமைப்புகளாலும், நான்காவது நிலை திரவ எரிபொருள் அமைப்பாலும் இயக்கப்படுகின்றன.

ஸ்கைரூட் நிறுவனத்தின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 3D பிரிண்டட் மற்றும் உயர் திறன் கொண்ட திட எரிபொருள் பூஸ்டர்கள் இதன் சிறப்பம்சங்கள். இந்த ராக்கெட், 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை தாழ்வான புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டது. முதல் பயணத்தில் 450 கிலோமீட்டர் உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையை இலக்காகக் கொண்டுள்ளது. 12.05 மணி அளவில் விக்ரம் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை! கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி! பிரமாண்டம்!

இந்த நிலையில், விக்ரம் 1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். விக்ரம் மந்த் ராக்கெட்டை தயாரித்துள்ள ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம் 1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று கூறினார். 

இதையும் படிங்க: மறு அறிவிப்பு வரும் வரை அவசியமற்ற ஈரான் பயணத்தை தவிருங்கள்! இந்தியா எச்சரிக்கை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share