×
 

கல்வியை சுமையா நினைக்காதீங்க!! பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்! தேர்வு பற்றிய விவாதம்!!

பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு அருமையான ஊக்க ஊட்டும் செய்தியை அளித்துள்ளார். பரிக்ஷா பே சர்ச்சா என்ற தலைப்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த சிறப்பு கலந்துரையாடலின் புதிய அத்தியாயத்தின் காணொலி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6, 2026) காலை பிரதமரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காணொலியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் நடத்திய உரையாடல் மிகுந்த உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. “உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது நண்பர்கள் என்ன சொன்னாலும், உங்கள் மனதில் தோன்றும் யோசனைகளை நம்புங்கள். அதைத் தொடர்ந்து செல்லுங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார். இலக்குகள் எப்போதும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும், ஆனால் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

“ஆசிரியர்களை விட ஒரு படி மேலே இருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சமநிலை அவசியம். ஒரு பக்கம் அதிகம் வளைந்தால் விழுந்துவிடுவீர்கள்” என்று கூறிய மோடி, வாழ்க்கைத் திறன்களும் தொழில்சார் திறன்களும் சமமாக முக்கியம் என்றார். கல்வியை சுமையாக நினைக்க வேண்டாம், முழு ஈடுபாட்டுடன் அணுக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமிர் பேச்சு புதிய உச்சம்! ராகுல் காந்தியால் அழியப்போகிறது காங்.,! மொத்தமாய் முடித்துவிட்ட மோடி!

மதிப்பெண்களை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், வாழ்க்கையில் எந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். “உங்கள் வெற்றி உங்கள் பெற்றோருக்கு கிடைக்கும் மிகப்பெரிய மரியாதையாக மாறும்” என்று உணர்ச்சிமயமாகக் கூறினார்.

 

A wonderful discussion with students on approaching exams with confidence and positivity. Do watch this very special episode of Pariksha Pe Charcha!#ParikshaPeCharcha26 https://t.co/k7IN79qvek

— Narendra Modi (@narendramodi) February 6, 2026

இந்த கலந்துரையாடலில் மாணவர்கள் சொந்தமாக இயற்றிய பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பிரதமர் மோடி அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அஸ்ஸாமின் பாரம்பரிய சால்வையான கமோசாவை அணிவித்து கௌரவித்தார். இந்த அருமையான தருணங்கள் காணொலியில் இடம்பெற்றுள்ளன.

பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த உரையாடல் பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. தேர்வு அழுத்தத்தை குறைத்து, நேர்மறை சிந்தனையுடன் தயாராக வேண்டும் என்ற செய்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த காணொலி விரைவில் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழக மாணவர்களும் இதைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமருக்கு எதிரான சதித்திட்டம்!! பார்லி.,-யில் பழி தீர்க்க முயற்சி!!! மோடிக்கு வைக்கப்பட்ட குறி!! காங்கிரசை சாடும் நயினார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share