×
 

#BREAKING சோகத்தில் முடிந்த புனித யாத்திரை...!! - 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... 10 பேர் உடல் நசுங்கி பலி...!

ஆந்திராவில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் சிந்தூர் மண்டலத்தில் உள்ள துளசிபகலு காட் சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயமடைந்தனர். 

சிந்தூரிலிருந்து மாரேடுமில்லி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து நிகழ்ந்து. சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 35 பயணிகள், பத்ராசலம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துக்கொண்டு,  அன்னவரம் நோக்கி பேருந்தில் சென்றுள்ளனர். 

சிந்தூர்-மாரேடுமில்லி காட் சாலையில் சென்று கொண்டிருந்த போது திருப்பத்தில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மீதமிருந்தவர்கள் பேருந்தின் ஜன்னலை உடைத்துக்கொண்டு தப்பியுள்ளனர். 

இதையும் படிங்க: வயதை வென்ற வசீகரம் ரஜினிகாந்த்... சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்...!

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். அந்தப் பகுதி காட்டுப் பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் பள்ளத்தாக்கில் இறங்கி நடவடிக்கையைத் தொடர்கின்றனர். பேருந்து முழுவதுமாக நிரம்பியிருந்ததால் உயிர் இழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். முதற்கட்ட தகவலின் படி 15 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அச்சப்படுகிறது.  மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
 

இதையும் படிங்க: போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... காலில் பாய்ந்த தோட்டா... பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share