பி.டி உஷாவின் கணவர் மறைவு…! மயங்கி விழுந்ததும் உயிர் பிரிந்த சோகம்..!
முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்.
முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா இந்திய தடகள வரலாற்றில் "பய்யோலி எக்ஸ்பிரஸ்" மற்றும் "தங்க மகள்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை. 1970களின் பிற்பகுதியில் கேரள அரசின் பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவில் சேர்ந்து, பயிற்சியாளர் ஓ.எம். நம்பியாரின் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றார். 400 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர் உள்ளிட்ட பல ஓட்டப் போட்டிகளிலும், தடுப்பு ஓட்டத்தில் சிறப்பாகத் திகழ்ந்தார்.
1980களில் ஆசிய அளவிலும், உலக அளவிலும் இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக உருவெடுத்தார். 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடுப்பு ஓட்டத்தில் நான்காவது இடம் பிடித்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியப் பெண்ணின் சிறந்த தரவரிசை அது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்று, 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை சேகரித்தவர்.
இந்திய தடகளத்தில் அவருக்கு இணையான வீராங்கனை இன்றுவரை எழுந்திருக்கவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில், உஷா 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி வி. சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் கேரளாவின் பொன்னானி பகுதியைச் சேர்ந்தவர்.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி... விஷம் குடித்த பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு... கண்ணீர் விட்டு கதறிய சக ஆசிரியர்கள்..!
அவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர், பின்னர் டெபுடி எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். சில ஆதாரங்களின்படி, அவர் பல்கலைக்கழக அளவில் கபடி வீரராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் பிடி உஷாவின் கணவர் சீனிவாசன் உடல் நல குறைவால் காலமானார். கேரளாவில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்த சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: தனித்துவமான மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள்..! யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரை..!