×
 

அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் சிக்கல்! புஷ்பா 2 பட ரிலீஸில் பெண் பலியான விவகாரம்! குற்றவாளியாக பெயர் சேர்ப்பு!

'புஷ்பா 2' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2 - தி ரூல்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஹைதராபாத் போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் அல்லு அர்ஜூன் உட்பட மொத்தம் 23 பேர் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

'புஷ்பா 2 - தி ரூல்' திரைப்படம் கடந்த 2024 டிசம்பர் 5 ஆம் தேதி தெலுங்கு உட்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்புக் காட்சி நடத்தப்பட்டது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் ரசிகர்களுடன் சேர்ந்து இந்தக் காட்சியைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடிகர்கள் தியேட்டருக்கு வந்ததும் அவர்களைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் முண்டியடித்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் 35 வயதான ரேவதி என்ற பெண் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?

 

இச்சம்பவத்துக்குப் பிறகு ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அல்லு அர்ஜூனை டிசம்பர் 13 ஆம் தேதி கைது செய்தனர். மறுநாள் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது நம்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் போலீசார் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் சந்தியா தியேட்டர் நிர்வாகம் முதல் குற்றவாளியாகவும், அல்லு அர்ஜூன் 11 ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். 

தியேட்டர் நிர்வாகிகள், படத்தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள், அல்லு அர்ஜூனின் பாதுகாவலர்கள், தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திரைப்பட விழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘கேப்டன்’ நினைவுநாள்..!! எனது அருமை நண்பர் - அவரது நற்பணிகளை நினைவுகூர்கிறேன்..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share