அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியா ஏற்காது! ட்ரம்ப் திட்டம் வேலைக்கே ஆகாது! புடின் திட்டவட்டம்!
இந்தியா மற்றும் சீனா மீது வரி விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியை தழுவும். வரி விதிப்பது உலகளாவிய பண வீக்கத்திற்கு வழிவகுக்கும். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்,'' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதாகக் கூறி இந்தியா மற்றும் சீனா மீது விதித்த கூடுதல் வரி, உலகளாவிய பணவீக்கத்தைத் தூண்டி, அமெரிக்க பொருளாதாரத்தையே பாதிக்கும் 'மிகப்பெரிய தோல்வி' என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த நிபுணர்கள் கூட்டத்தில் பேசிய புடின், இந்தியாவுடனான ரஷ்யாவின் நீண்டகால உறவைப் புகழ்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை 'புத்திசாலித்தனமான தலைவர்' என்று பாராட்டினார். இந்திய மக்கள் அரசின் முடிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்றும், மோடி எந்த அழுத்தங்களுக்கும் இணங்க மாட்டார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சோச்சியில் நடந்த கூட்டத்தில் புடின், இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவைப் பற்றி பேசினார். "சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன் சிறப்பு கூட்டாண்மையை அறிவித்தோம். இந்த உறவு மிகவும் வலுவானது. இந்திய மக்கள் எங்களின் நட்பை மறக்க மாட்டார்கள்," என்று கூறினார். பிரதமர் மோடியைப் பற்றி, "அவர் ஒரு புத்திசாலி தலைவர். தனது நாட்டின் நலனை முதன்மையாகக் கருதுபவர்," என்று பாராட்டினார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் மிரட்டலை தட்டி விட்ட மோடி!! ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி டாப் கியர்!
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா விதித்த வரி குறித்து, "இதில் அரசியல் இல்லை; முற்றிலும் பொருளாதார கணக்கீடு. இந்தியா எங்கள் எரிசக்தி வளங்களை கைவிடுமா? கைவிட்டால், 9-10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். ஆனால், கொள்முதலைத் தொடர்ந்தால், அமெரிக்க வரியால் ஏற்படும் இழப்பும் அதே அளவில் இருக்கும்," என்று விளக்கினார்.
இந்திய மக்கள் தங்கள் அரசின் முடிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள், எந்த அவமானத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், மோடி அழுத்தங்களுக்கு இணங்க மாட்டார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் டிரம்ப், "ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியாவும் சீனாவும் உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி அளிக்கின்றன," என்று விமர்சித்தார். இதையடுத்து, அமெரிக்கா இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மீது 25-50% கூடுதல் வரி விதித்துள்ளது.
இந்தியா, உக்ரைன் போருக்கு முன் 2% ரஷ்ய எண்ணெயை மட்டுமே இறக்குமதி செய்தது, ஆனால் தற்போது 40% வரை உயர்ந்துள்ளது, இது குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால் இந்திய பொருளாதாரத்திற்கு பயனளித்து வருகிறது. அமெரிக்காவின் 50% வரி, இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கலாம். ஆனால் இந்தியா தனது கொள்முதலை கைவிடாது என புடின் கூறினார்.
இந்தியா-ரஷ்ய உறவு, குறிப்பாக எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில், பல தசாப்தங்களாக வலுவாக உள்ளது. 2025 மார்ச் வரை, இரு நாடுகளுக்கிடையேயான வணிகம் 68.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இதில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில், புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணம், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புடினின் கருத்துகள், அமெரிக்காவின் வரி விதிப்பு உலகளாவிய பணவீக்கத்தை தூண்டி, அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றன. இந்தியாவின் பொருளாதார முடிவுகள், உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்துவதாகவே உள்ளன. இந்தியா, அமெரிக்காவுடன் நட்பு உறவைப் பேணினாலும், ரஷ்யாவுடனான உறவை சமநிலைப்படுத்தி, தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தொடர்கிறது. புடினின் இந்த விமர்சனம், அமெரிக்கா-ரஷ்யா-இந்தியா இடையேயான புவிசார் பதற்றத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் மக்கள் மற்றும் அரசு, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்காமல், தேசிய நலனை முன்னிறுத்துவதாக புடின் பாராட்டியுள்ளார். இந்த சம்பவம், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையும், மோடியின் மூலோபாய தலைமையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: உக்ரைனை எப்படி தாக்க போறீங்க! புடினிடன் கேட்கிறார் மோடி! இந்தியா மீது நேட்டோ வைக்கும் புகார்!