அமலாக்கத்துறையும், சிபிஐயும் பாஜகவின் ஆயுதம்! காங்கிரஸை தான் குறிவைக்கிறாங்க! ராகுல்காந்தி ஆதங்கம்!
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
பெர்லின்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பேசிய உரையில், அமலாக்கத்துறை (இடி), மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) உள்ளிட்ட அரசு அமைப்புகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இது இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், அது முடிவடைவதற்கு முன்பே ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சென்றது பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி பெர்லின் நகருக்குச் சென்ற ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாடினார். அதன்பிறகு, பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில், “அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஆளும் பாஜக அரசு ஒரு ஆயுதம்போல பயன்படுத்தி வருகிறது. நமது அரசு துறைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக மீது அமலாக்கத்துறை அல்லது சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், ஒரு தொழிலதிபர் காங்கிரஸை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகால திட்டத்தை ஒரே நாள்ல முடிச்சிட்டீங்கல்ல! புதிய சட்டம் கிராம விரோதம்! மோடி மீது ராகுல் தாக்கு!
#WATCH | Berlin, Germany | Lok Sabha LoP Rahul Gandhi says, "There is a wholesale capture of our institutional framework. Our intelligence agencies, ED and CBI have been weaponised. ED and CBI have zero cases against BJP and most of the political cases are against the people who… pic.twitter.com/ffaoEamAPI
— ANI (@ANI) December 22, 2025
மேலும், “காங்கிரஸ் கட்சிதான் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகளை உருவாக்க பாடுபட்டது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாகப் பார்க்கவில்லை. ஆனால், பாஜக அவற்றை தங்களுக்குச் சொந்தமானவையாகப் பார்க்கிறது. அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும் சிபிஐயையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் பாஜகவை எதிர்த்துப் போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகளை காப்பாற்றுவதற்காகவே போராடுகிறோம்” என்று விரிவாக விளக்கினார்.
இந்த உரை, இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மீதான அரசு அமைப்புகளின் துஷ்பிரயோகம் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. பாஜக தரப்பிலிருந்து இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு, வெளிநாட்டில் இந்திய அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பது சரியா என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க மாட்டேன்!! ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் மூத்த தலைவர் அடம்!