×
 

ராகுல் காந்தியால் நடுத்தெருவுக்கு வந்த தேஜஸ்வி யாதவ்... பீகார் தேர்தல் "மகா" சொதப்பல்கள்...!

இந்த முறை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் பாஜகவைத் தேர்தலாக மிகப்பெரிய போட்டியை ஆரம்ப கட்டத்தில் உருவாக்கி இருந்தாலும், இவ்வளவு பெரிய சரிவை சந்திக்க ராகுல் காந்தியை முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குத் தேவையான 122 இடங்களை தாண்டி 191 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றன.

மகா கட்பந்தன் கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை காட்டிலும் பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது.

143 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 37 இடங்களில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. மேலும், 29 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரிகள் 3 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கின்றன.

இதையும் படிங்க: போட்றா வெடிய...!! பீகார் தேர்தலில் செஞ்சூரி விளாசிய பாஜக... வரலாறு காணாத முன்னிலை...!

கடந்த, 2020 சட்டப்பேரவை தேர்தலிலும் 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிர ஜனதா தளம் கட்சி, 75 இடங்களை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 70 இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. 

 இந்த முறை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பீகார் தேர்தலில் பாஜகவைத் தேர்தலாக மிகப்பெரிய போட்டியை ஆரம்ப கட்டத்தில் உருவாக்கி இருந்தாலும், இவ்வளவு பெரிய சரிவை சந்திக்க ராகுல் காந்தியை முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. முதலில் ராகுல் செய்த தவறாக கூறப்படுவது பீகாரின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கடைசி வரை அறிவிக்காமல் இழுத்தடித்தது என அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். அடுத்ததாக தொகுதி பங்கீட்டிலும் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் வரை இழுபறி நீடித்தது காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணி தேர்தல் களத்தில் இறங்கி விறுவிறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் கூட, டெல்லியில் உட்கார்ந்து கொண்டு கூடுதல் தொகுதி கேட்டு தேஜாஸ்ரீ யாதவை படுத்திய எடுத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் தலைமை . இதன் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுக்க முடியாமல் அல்லாடியது ஆர்ஜேடி. இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியிலிருந்தே வெளியேறியது. பசுபதிகுமார் பராஸும் தொகுதி பங்கீடு சிக்கலால் கூட்டணிக்குள் வராமல் போனார்.

அடுத்ததாக வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பீகார் மக்களிடையே பெரிதாக எடுபடவில்லை என கூறப்படுகிறது. பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல் காந்தி பிரச்சாரத்தை தொடங்கினார். ஆனால் அதற்கான முறையான ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இதனை அங்குள்ள மக்கள் தேர்தல் தோல்விக்கு காரணமாக பார்த்தார்களோ தவிர தேர்தல் பிரச்சார யுக்தியாக பார்க்கவில்லை. 

பீகாரில் நிதீஷ் குமார் மற்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரங்கள் மக்களிடையே மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஆனால் ராகுல் காந்தி பீகார் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்ததும் சரிவுக்கான மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

வாக்கு திருட்டு தொடர்பான பயணத்தின் போது தீவிரமாக ஈடுபட்ட ராகுல் காந்தி, அந்த அளவுக்கு கூட பீகார் தேர்தல் பரப்பளையில் தலை காட்ட வில்லை என்றும் ஒரு கட்டத்திற்கு மேல் ராகுல் காந்தியின் படத்தை பேனர்களில் போடுவதையே ராஷ்டிய ஜனதா தளம் மற்றும் கூட்டணி கட்சியினர் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அகல பாதாளத்திற்கு செல்வதற்கான காரணங்களாக ராகுல் காந்தி மீது முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: #BREAKING பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share