×
 

அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!

டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 24 அன்று நாடு தழுவிய அமைதி வழி போராட்டத்திற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மாவட்ட தலைநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து நீதி கோரும் குரல்கள் உள்ளன. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வலுப்பெற்று, பாராளுமன்ற நோக்கிய பேரணியாக மாறியது. போலீஸ் நடவடிக்கைகள், உரையாடல்கள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியிலும் CJP தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: மெரினாவை அடுத்து கொடிசியாவுக்கு பூட்டு... கோவையில் போலீஸ் படை குவிப்பு... தவெக அரசு அதிரடி...!

இந்த நிலையில், அமைதியாக போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளை வீசி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். பெல்லட் குண்டுகளால் காயமடைந்த இளைஞரின் உடலில் உள்ள காயங்களை காட்டி ராகுல்காந்தி பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிங்க: போராட்டத்தில் குதித்த லயோலா கல்லூரி மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்.. ரத்தாகுமா நீட்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share