×
 

#BREAKING: அவங்களால எதையுமே பேச முடியாது! கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி ஆவேசம்..!

தங்கள் போராட்டம் அரசியலுக்கானது அல்ல., அரசியலமைப்புக்கான போராட்டம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்த‌த்தை கண்டித்து, நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று பேரணியாக சென்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்ற எம்.பி.க்களை டெல்லி காவல்துறை கைது செய்தது.

வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த தேர்தல் ஆணையம் நோக்கி போலீசாரின் தடையை மீறி செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, கனிமொழி, அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா, சஞ்சய் ராவத் மற்றும் சாகரிகா கோஷ் உள்ளிட்ட எம்பிக்களை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. 

இரும்பு வேலி மூலம் எம்பிக்களை தடுத்து நிறுத்தி டெலிபோனை சார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்டதை குறித்து அவர்களால் பேச முடியாது என்பதுதான் உண்மை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!

இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல என்று உறுதிப்படக் கூடிய ராகுல் காந்தி இது அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம் என்று கூறினார்.. இந்தப் போராட்டமானது ஒரு மனிதனுக்கானது என்றும் ஒரு வாக்குக்கானது எனவும் தெரிவித்தார். தங்களுக்கு சுத்தமான மற்றும் தூய்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: அஸ்திவாரத்தை அசைச்சு பார்த்துடீங்க.. இனி உங்களை தொட விடமாட்டோம்.. ராகுல் காந்தி ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share