×
 

அஸ்திவாரத்தை அசைச்சு பார்த்துடீங்க.. இனி உங்களை தொட விடமாட்டோம்.. ராகுல் காந்தி ஆவேசம்..!!

இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த திருத்தம் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 22 லட்சம் பேர் இறந்தவர்கள், 35 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் எனவும், 7 லட்சம் பேர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. 

எதிர்க்கட்சிகள் இதனை "ஜனநாயகத்திற்கு எதிரான செயல்" என விமர்சித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை "தில்லுமுல்லு" என விமர்சித்து, பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எச்சரித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: ஒரு வலிமையான ஆதாரத்தை முன்வைத்தார் ராகுல்.. சப்போர்ட்டுக்கு இறங்கிய ப.சிதம்பரம்..!!

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் முறைகேடுகள் உள்ளதாகவும், ஆதார், ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களை ஏற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் பிழைகளை சரிசெய்ய செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக செய்யப்படும் ஒரு பெரிய மோசடி. ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் தப்ப முடியாது. இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம்.

தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார். உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் பணியாற்றினாலும் சரி என தெரிவித்துள்ளார். 
 

இதையும் படிங்க: காலம் மாறும்.. தரமான சம்பவம் இருக்கு! தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share