×
 

வீர் பூமியில் ராகுல்காந்தி..! தந்தை ராஜீவ் காந்திக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி..!

ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

1984 ஆம் ஆண்டு தனது தாயார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் இறப்பை தொடர்ந்து, ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் டிசம்பர் 2, 1989 வரை இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார். மே 21, 1991 அன்று, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பேரணியின் போது, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெய்சங்கரின் மவுனம் மிக மோசமானது.. ஓபனாக விமர்சித்த ராகுல் காந்தி!!

இந்த நிலையில் டெல்லியில் உள்ள பீர் பூமியில் ராஜீவ் காந்தி நினைவு மண்டபத்தில் அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினர். 

இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு தகவலா? குற்றம்சாட்டும் ராகுல் காந்தி.. வெளியுறவுத்துறை விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share