தாக்குதல் நடத்துனீங்க சரி! அந்த தீவிரவாதிகள் எங்க? மாநிலங்களவையில் கார்கே சரமாரி கேள்வி..!
பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கே என நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 (இன்று) முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்துள்ளன. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள், மற்றும் பணவீக்கம் போன்ற முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. சில மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பகல் காமில் அப்பாவிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ராணுவ தாக்குதல் தொடர்பாகவும், தன்னால்தான் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் வந்ததாக அமெரிக்க அதிபற்றம் கூறியது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மக்களவை கேள்வி நேரத்தோடு கூடிய போது பகல் காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பகல் காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தம்மால் தான் ஏற்பட்டதாக 24 முறை டிரம்ப் கூறியிருக்கிறார் அது தொடர்பாகவும், பகல்வாமில் 26 அப்பாவி பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், தீவிரவாதிகள் கைது செய்யப்படவுமில்லை, அவர்கள் கொல்லப்படவும் இல்லை என கூறிய கார்கே, தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளி.. சபாநாயகரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!
அப்போது பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உரிய விளக்கம் தரப்படும் என தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபடுவது சரியல்ல என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த ஒரு பிரச்சனை குறித்தும் முழுமையாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பகல் காம் தாக்குதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி தந்துள்ளதாகவும் தேவை இல்லாம கேள்வி நேரத்தில் குழப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். விமான போக்குவரத்து துறை அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்... ஆரோக்கியமாக விவாதிக்க எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!