×
 

7 மணிக்கு மேல் NO கடன் வசூல் கால்..! STRICT ORDER... அதிரடி காட்டிய RBI..!

வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

 வங்கி கடன் வசூலிப்பவர்களால் ஏற்படும் மன உளைச்சல் என்பது இன்று பலருக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும்போது, அந்த அழுத்தம் வெறும் பணப் பிரச்சினையாக மட்டும் நிற்காமல், மனதை ஆழமாகத் தாக்குகிறது. தினசரி வாழ்க்கையில் அமைதியை இழக்கச் செய்கிறது, தூக்கத்தைப் பறிக்கிறது, சில சமயங்களில் வாழ்வையே முடிக்கும் எண்ணத்தைத் தூண்டிவிடுகிறது.ஒரு சாதாரண குடும்பத் தலைவர் அல்லது சிறு வியாபாரி கடன் வாங்கியிருப்பார்.

வேலை இழந்துவிட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, வீட்டில் ஏதோ அவசரச் செலவு வந்தாலோ தவறாமல் தவணை செலுத்த முடியாமல் போய்விடும். அப்போதுதான் வசூலிப்பவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். முதலில் தொலைபேசியில் அழைப்பு வரும். "எப்போது கட்டுவீங்க? இன்னும் எத்தனை நாள்?" என்று தொடங்கி, பிறகு குரல் உயரும். "நீங்க இப்படியே போனா என்ன ஆகும் தெரியுமா?" என்று மிரட்டல் தொடங்கிவிடும். ஒரே நாளில் பத்து, பதினைந்து முறை அழைப்பு வரும்.

சில சமயம் அதிகாலை அல்லது நள்ளிரவிலும் அழைப்பு வரும். அந்த ஒலி கேட்டவுடனேயே இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும். யாரோ அழைக்கிறார்களோ என்று பயந்து போனால், மறுபடியும் அதே எண். அந்த பயம் தொடர்ந்து இருக்கும்.பிறகு வீட்டுக்கு நேரில் வர ஆரம்பிப்பார்கள். வாசலில் நின்று உரக்கப் பேசுவார்கள். அக்கம்பக்கத்தினர் கேட்கும்படி "இவர் கடன் கட்டலை, ஏமாற்றிட்டார்" என்று சொல்லி அவமானப்படுத்துவார்கள். குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது, மனைவி வீட்டு வேலையில் இருக்கும்போது இப்படி நடக்கும். அந்த அவமான உணர்வு மிகக் கொடுமையானது. இதனிடையே, வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை டூ ஜோலார்பேட்டை... ரயிலில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

அதன்படி, காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது என்றும் கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும் என்றும் கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது என கூறிய RBI இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் தகவல் தெரிவித்து உள்ளது. 

இதையும் படிங்க: “மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்... ஆனா...” - ரூ.5000 கொடுத்த ஜோரில் மகளிருக்கு பொன்முடி வைத்த கோரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share