×
 

காடை முட்டை, முட்டைக்கோஸ் ஜூஸ், பிஸ்தா ஐஸ்கிரீம்... இந்தியாவில் ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட உணவுகள் என்னென்ன?

ரஷ்ய புதினின் உணவுப் பழக்கம் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

23 வது இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் டிசம்பர் 4ஆம் தேதி மாலை இந்தியாவுக்கு வந்தார். விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி நேற்று அவருக்கு தன்னுடைய இல்லத்தில் விருந்து அளித்தார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள அதிபர் புட்டினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதினின் குண்டு துளைக்காத கார் ஆகியவை குறித்த செய்திகள் தான் தற்போது மொத்த இணையத்தையும் ஆக்கிரமித்து உள்ளன. 

இந்த நிலையில் அதிபர் புதின் விரும்பி சாப்பிடும் உணவுகள் குறித்த தகவல்கள் வெளியாக இருக்கின்றன. புதினின் உணவுப் பழக்கம் கட்டுப்பாடு, ஒழுக்கம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் எப்போதுமே உணவுத் தேர்வுகளில் புதுமையை விட ஊட்டச்சத்துக்கும், ஆடம்படத்தை விட புரதம் மற்றும் எளிமைக்கும் முன்னுரிமை அளிக்கிறார். 

புதின் காலை உணவாக, பாலாடை கட்டி, கஞ்சி, ஆம்லெட், காடை முட்டைகள், பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுவே இந்தியாவிலும் அவருக்கு பராமரிப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதவிர சாலமன் மீன், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை கோஸ், தக்காளி, வெள்ளரிக்காய் அடங்கிய சாலட் போன்றவை அவரது விருப்ப உணவாகும். இது தவிர்த்து புட்டினுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் இஷ்டமாம், குறிப்பாக பிஸ்தா ஐஸ்கிரீம் என்றால் விரும்பிச் சாப்பிடுவார் என்பதால், அதுவும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தி.குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் வேண்டாம்..!! ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..!!

பானங்களைப் பொறுத்தவரை கேஃபிர்  எனப்படும் புளிக்கவைக்கப்பட்ட பால்,  புதிய பழச்சாறுகள் அல்லது எளிய மூலிகை பானங்களை எடுத்துக்கொள்கிறார். எப்போதாவது பீட்ரூர் ஜூஸ், பார்லி கஞ்சி பருகிறார்.  கனமான பேக்கரி பொருட்கள், சர்க்கரை இனிப்புகள் அல்லது வெண்ணெய் பேஸ்ட்ரிகளை விரும்புவதில்லை.

ரஷ்ய சமையல்காரர்கள், உதவியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புள்ள குழு அவருடன் பயணிக்கிறது. தேவையான பொருட்கள் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்டு, அவருடன் எடுத்துச் செல்லப்பட்டு, கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் சமைக்கப்படுகின்றன. ஒரு நடமாடும் உணவுப் பரிசோதனை ஆய்வகமும் அவர் செல்லும் நாடுகளுக்கு எல்லாம் உடன் கொண்டு செல்லப்படுகிறது. 

பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சமையலறைகளில் உணவு சமைக்கப்படுகிறது, நேரடியாக விமானத்தில் கொண்டு வரப்படும் அல்லது முன்கூட்டியே முழுமையாக பரிசோதிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தி. மிக முக்கியமான முன்னுரிமை பாதுகாப்பு: ஒவ்வொரு உணவும் பரிமாறப்படுவதற்கு முன்பு சரிபார்க்கப்படுகிறது, பெரும்பாலும் பயிற்சி பெற்ற சோதனையாளர்களால், இந்த நடைமுறை மாஸ்கோவிலும் வெளிநாட்டிலும் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நெறிமுறைகள் காரணமாக, முறையான விருந்துகள் கூட கவனமாக கையாளப்படுகின்றன. 

இதையும் படிங்க: “மதங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெறாது” - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பரபரப்பு கருத்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share