×
 

காக்கும் கடவுள் விஷ்ணுவின் அழிக்கும் ஆயுதம்.. இந்தியாவை காக்கும் சுதர்சன சக்ரம்.. பாக்., திட்டம் தவிடுபொடி..!

நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் அழித்து இந்திய வான் பரப்பை பாதுகாத்து வருகிறது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவச அமைப்பு. அது எப்படி செயல்படுகிறது? அதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்..

இந்து மத நம்பிக்கையில் காக்கும் கடவுளாக கருதப்படும் விஷ்ணுவின் கைகளில் எப்போதும் ஒரு சக்கரம் சுழன்று கொண்டு இருக்கும். அதன் பெயர் தான் சுதர்ஷன சக்கரம்.. எதிரிகள் எங்கிருந்தாலும் சென்று அழித்துவிட்டு, விஷ்ணுவின் கைகளில் திரும்பும் அந்த சக்கரம். மஹாபாரதத்தில் மஹாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணரும் தேவைப்படும்போது, சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்துள்ளார். அதேபோல், நமது பாரத நாட்டின் பாதுகாப்புக்கு பெருமளவில் கை கொடுத்து வருகிறது எஸ்.400 எனும், ஏவுகணை எதிர்ப்பு சாதனம்.

பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், பயங்கரவாதிகளை வேரறுக்கவும்பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒன்பது இலக்குகளை, 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை வாயிலாக, இந்தியா தரைமட்டமாக்கியது. 100 பயங்கரவாதிகள் வரை அழிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முயன்றது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக நேற்று காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பாகிஸ்தான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள பல ராணுவ இலக்குகளை, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி, பாகிஸ்தான் தாக்க முயன்றது. குறிப்பாக, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லுாதியானா, புஜ் ஆகிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்தது.

இதையும் படிங்க: உள்ளுக்குள் புகுந்து இந்தியா வெறியடி... உள்ளே இருந்தே பலூச் மரண அடி... வெடித்துச் சிதறும் பாகிஸ்தான்..!

போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி ஒரே நேரத்தில் அட்டாக் செய்தது. ஆனால் எல்லா குண்டுகளையும் இந்தியா கச்சிதமாக இடைமறித்து அழித்தது. இதற்கு இந்தியா எடுத்த முக்கிய அஸ்திரம் S-400 என்ற வான் பாதுகாப்பு கவசம் தான். இது தான் பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்தது. உலகில் இருக்கும் ஏவுகணை, ட்ரோன் தடுப்பு கவசங்களில் இது மிகவும் சக்தி வாய்ந்தது.

எஸ்-400 ஒரு ஆயுதம் கிடையாது. ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு. ஒவ்வொரு ஆயுதமும் பல கிலோமீட்டரை கண்காணிக்க கூடிய திறன் பெற்றது. இது நம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு S-400 வான் பாதுகாப்பு கவசத்திலும் 2 பேட்டரிகள் உண்டு. ஒரு பேட்டரியில் தலா 6 லாஞ்சர் இருக்கும். ராடார் சிஸ்டமும் அதில் உண்டு. ஒரு பேட்டரி மூலம் 128 இடைமறிப்பு ஏவுகணைகளை ஏவலாம்.

400 கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும் இந்த ஏவுகணையின் பரப்பளவு இருக்கும். கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டருக்கு முன்னாடி வரக்கூடிய ஒரு ஏவுகணையை கண்டறிந்து, 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே இடைமறித்து அதை அழிக்கும். இப்போது இந்தியா வசம் மூன்று S-400 கவசங்கள் உள்ளன. அடுத்த ஆண்டில் இன்னும் 2 கவசம் நம் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது. இந்த S-400 வான் பாதுகாப்பு கவசத்துக்கு இந்தியா சுதர்சன சக்கரம் என்று பெயர் சூட்டி உள்ளது.

நம் நாட்டின் பாதுகாப்புக்கு இப்போது பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது எஸ்-400 எனும் சுதர்சன சக்கரம். ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த பெரும் ஒப்பந்தம், கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்துவதில், எஸ்.400க்கு பெரும் பங்கு உண்டு. இது தவிர ஏவுகணை தடுப்பு சிஸ்டங்களான ஆகாஷ், எம்ஆர்எஸ்ஏஎம், Zu-23 ஆகியவற்றையும் இந்தியா ஆக்டிவேட் செய்தது.

இதையும் படிங்க: அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share