திருப்பதியை அடுத்து சபரிமலையிலுமா? - மெகா மோசடியால் ஷாக்கான ஐயப்ப பக்தர்கள்...!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நெய் விநியோகிக்கப்பட்டதில் ரூ.85 லட்சம் மதிப்பிலான முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரம் குறைந்த நெய் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
திருப்பதி எழுமலையான் கோயிலின் லட்டு நெய் விவகாரத்தைத் தொடர்ந்து, தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான நெய் விநியோகத்திலும் முறைகேடு நடந்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு, திருப்பதி எழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து சர்ச்சை வெடித்தது. ஆய்வக பரிசோதனையில், அந்த நெய்யில் விலங்கு கொழுப்பு உள்ளிட்ட கலப்படக் கூறுகள் இருந்ததாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து, அந்த விவகாரம் குறித்து பல்வேறு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நெய் தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கேரள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (மில்மா) தரம் குறைந்த நெய்யை வினியோகித்ததாக புகார்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கர்நாடகாவை நம்புறது WASTE..! அனைத்து கட்சி கூட்டம்..! தமிழக அரசுக்கு திருமா. கோரிக்கை..!!
திருப்பதி லட்டு நெய் விவகாரத்தைத் தொடர்ந்து, தற்போது சபரிமலைக்கு நெய் வினியோகிக்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலைக்கு வழங்கப்பட வேண்டிய நெய்யின் ஒரு பகுதி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பிலான முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, சபரிமலை தேவசம் போர்டு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
நெய் வினியோகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறும் தேவசம் போர்டுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வினியோகிக்கப்பட்ட நெய்யில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தரம் குறைந்த நெய் வழங்கப்பட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், தமிழ்நாட்டிலிருந்து தரம் குறைந்த நெய் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வினியோகிக்கப்பட்டதாகவும் புகார்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'வீ தி லீடர்ஸ்' அடுத்த அதிரடி! புதிய அமைப்புடன் களமிறங்கும் அண்ணாமலை!! புதிய திட்டம் என்ன?