காதல் கணவரை பிரியும் சாய்னா நேவால்! 7 ஆண்டுகள் மணவாழ்க்கை கசக்க காரணம் என்ன?
சாய்னா நேவால், தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்துள்ளார். 2018ல் திருமணம் செய்த இவர்கள், ஏழு ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
சாய்னா நேவால், இந்திய பேட்மிண்டன் அரங்கில் ஒரு முன்னோடியாக விளங்கும் பெண் வீராங்கனையாவார். 1990 மார்ச் 17ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தின் ஹிசார் நகரில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் பெண் பேட்மிண்டன் வீராங்கனையாக உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர்.
சாய்னாவின் பேட்மிண்டன் பயணம் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறியபோது உலகின் கவனத்தை ஈர்த்தது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2015ஆம் ஆண்டு உலக தரவரிசையில் முதல் இடத்தை அடைந்த முதல் இந்திய பெண் வீராங்கனையாகவும் திகழ்ந்தார். காமன்வெல்த் விளையாட்டு விழாக்களில் 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கங்களையும், 2006 இல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். மேலும், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், சூப்பர் சீரிஸ் உள்ளிட்ட பல முக்கிய போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
இதையும் படிங்க: வெச்ச குறி தப்பாது..! 2026-ல நம்ப தான்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!
சாய்னாவின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு மிக உயர்ந்த விருதுகளை வழங்கியுள்ளது. 2009இல் அர்ஜுனா விருது, 2010இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (இந்தியாவின் உயரிய விளையாட்டு விருது), மற்றும் 2016இல் பத்ம பூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன.
இவை தவிர, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்று இந்தியாவின் மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அறியப்படுகிறார். 2023ஆம் ஆண்டு முதல் மூட்டு வலி மற்றும் முழங்கால் கீல்வாத பிரச்சனைகளால் அவர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக உள்ளன. இந்த நிலையில் தான் இவர் தனது காதல் கணவரை பிரிவதாக அறிவித்திருந்ப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சாய்னா நேவால், புல்லேலா கோபிசந்த் அகாடமியில் தனது பயிற்சி தோழராக இருந்த பேட்மிண்டன் வீரர் பருபள்ளி காஷ்யப்பை 2018 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹைதராபாத்தில் உள்ள இந்த அகாடமியில் பயிற்சி பெற்றபோது நீண்டகால நட்பை வளர்த்து, பின்னர் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. இந்திய விளையாட்டு உலகில் இவர்களது திருமணம் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்பட்டது. காஷ்யப் ஒரு திறமையான வீரராகவும், 2014 காமன்வெல்த் தங்கப் பதக்க வெற்றியாளராகவும் இருந்தவர். திருமணத்திற்குப் பிறகு காஷ்யப் சாய்னாவின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்
2025 ஜூலை 13ஆம் தேதி, சாய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவு மூலம் காஷ்யப்புடனான ஏழு ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நிறைய யோசனைகள் மற்றும் பரிசீலனைகளுக்குப் பிறகு, காஷ்யப் பருபள்ளியும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் அமைதி, வளர்ச்சி மற்றும் குணப்படுத்துதலைத் தேர்வு செய்கிறோம் - எங்களுக்கும் ஒருவருக்கொருவர்".
"நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் முன்னேற சிறந்ததைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி இந்த பிரிவு முடிவு இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காஷ்யப் இதுவரை இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: சர்ரென அதிகரிக்கும் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை! மருத்துவ கண்காணிப்பு தீவிரம்..!