×
 

வசதியானவர்களுக்கு எதுக்கு கோட்டா? 6 வாரம் தான் டைம்..  மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் செக்!

எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' முறையைக் கொண்டு வருவது குறித்து மத்திய, மாநில அரசுகள் 6 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்சி/எஸ்டி (SC/ST) இடஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ முறையைக் கொண்டு வந்து, பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து வெளியேற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று மிகத் தீவிரமான விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவுகளில் வசதி படைத்தவர்களை இடஒதுக்கீட்டுப் பலன்களிலிருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் அகில இந்திய ரயில்வே எஸ்சி/எஸ்டி ஊழியர்கள் சங்கம் சார்பில் கிரீமி லேயர் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பார்த்த நீதிபதிகள், அடிமட்டத்தில் உள்ள சாதாரண ஊழியர்களே இந்த முறையை எதிர்ப்பது தங்களுக்கு வியப்பளிப்பதாகக் கருத்து தெரிவித்தனர்.

விசாரணையின் போது நீதிபதிகள் அமர்வு, நிலை 3 மற்றும் 4 பிரிவில் உள்ள சாதாரண ஊழியர்கள் கூட கிரீமி லேயர் முறையை எதிர்ப்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. வசதி படைத்தவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்குவதால் உங்களைப் போன்ற சாதாரண ஊழியர்களுக்குத் தானே அதிகப் பலன் கிடைக்கும்? எனக் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களின்படி, இடஒதுக்கீடு என்பது மிகவும் ஏழ்மையான மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது; ஆனால் இப்போது 5 முறை அமைச்சராக இருந்தவர்களின் பிள்ளைகள் கூட இடஒதுக்கீட்டைப் பயன்படுத்துகின்றனர். இது ஏழை மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என வாதிட்டார்.

இதையும் படிங்க: நாங்கள் தலையிட விரும்பவில்லை! சென்னை உயர்நீதிமன்றமே முடிவெடுக்கும்! ஜனநாயகன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரம் ஒரு முக்கியக் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால், இதில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். இதனால், இது குறித்து 6 வாரக் காலத்திற்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து இடையீட்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் அடிப்படை அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்க அடுத்தகட்ட விசாரணைக்குத் தள்ளிவைத்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு இந்தியாவின் இடஒதுக்கீடு வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

இதையும் படிங்க: ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாப்பு: மத்திய அரசின் உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share