×
 

ID கார்டு விவகாரம்... கொதித்துப் போன அரசியல் கட்சியினர்... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!

ஐடி கார்டு விவகாரம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த அட்டையில் மாணவர்களின் சாதி சான்றிதழ் விவரங்களும் இணைக்கப்படும் என்பது பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில், பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கினார். மாணவர்களின் பெயர், முகவரி, சாதி சான்றிதழ் விவரம், ரத்த வகை (பிளட் குரூப்), ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே அடையாள அட்டையாக இது வழங்கப்படும்.

முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பிற வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததற்கு கண்டனம் வலுத்தது.

இதையும் படிங்க: தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். மாணவரின் சாதி ஐடியில் இடம்பெறும் என்ற தகவல் உண்மையல்ல. மாணவர் ஐடியில் இடம்பெறும் விவரங்கள் கல்வித்துறையின் முடிவுக்கு உட்பட்டது என்று கூறினார்.

மாணவர்களின் தனியுரிமைக்கு முன்னுரிமை. மாணவரின் அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இருக்கும். பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், ரத்த வகை மட்டுமே ஐடியில் இடம்பெறும் என்று தெரிவித்தார். மாணவர்களின் பிற விவரங்களை QR கோடு மூலம் மட்டுமே அணுக முடியும். ஐடியில் இடம்பெறும் தகவல் விரிவான ஆலோசனைக்கு பின்னரே முடிவு என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share