×
 

காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் மதிப்புமிக்க 'தகைசால் தமிழர்' விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட உள்ளது.  

காநாட்டின் விடுதலைத் திருநாளான சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்புமிக்க ‘தகைசால் தமிழர்’ விருது இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எம். கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட உள்ளது.  

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் தன்னலமின்றித் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த ஆளுமைகளைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 'தகைசால் தமிழர்' விருது ஏற்படுத்தப்பட்டுத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், பொதுவாழ்வில் நீண்டகால அனுபவம் கொண்டவரும், வழக்கறிஞராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய மூத்த அரசியல் தலைவர் எம். கிருஷ்ணசாமி இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: 80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!

இவர் பாமக சட்டமன்றக் குழுத் தலைவரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணியின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னையில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய பின்னர், முதலமைச்சர் இவ்விருதை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார். இந்த உயரிய தகைசால் தமிழர் விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. 

 

 

இதையும் படிங்க: 80-வது சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு தீவிர பாதுகாப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share