×
 

ராஜஸ்தானில் பயங்கரம்... ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...!

ராஜஸ்தானில் ஐடி பெண் ஊழியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் தனது பிறந்தநாள் விழாவுக்கு சென்ற பெண் ஐடி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் ஐடி துறையில் பணிபுரியும் பின் ஒருவர் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.

இதையும் படிங்க: இந்த ஊர்ல பெண்கள் செல்போன் யூஸ் பண்ணகூடாதாம்..!! வெறும் கீபேட் ஃபோன்தானாம்..!!

கொண்டாட்டத்திற்கு பிறகு அந்த பெண்ணை வீட்டில் விடுவதற்கு சென்றபோது ஜித்தேஷ், மற்றொரு பெண் ஊழியர் சென்றுள்ளனர். அப்போது சிகரட்டில் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து நடுவழியில் காரில் வைத்தே மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அழிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐடி நிறுவன சிஇஓ ஜித்தேஷ் சிசோடியா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "தூக்கு தண்டனை"...! பெற்ற மகளையே வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய தந்தை... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share