×
 

‘ராகுலின் திட்டம் எடுபடவில்லை’! சசி தரூரின் பேச்சால் சர்ச்சை! கவனமாக இருங்கள்’ என காங்கிரஸ் வார்னிங்!

கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டங்களைப் போல, ராகுலின் திட்டம் இளம் தலைமுறையினர் இடையே பெரிய அளவில் எடுபடவில்லை என்று சசி தரூர் கூறியது சர்ச்சையாகி உள்ளது.

‘ராகுலின் திட்டம் எடுபடவில்லை’... சசி தரூர் கருத்துக்கு வேணுகோபால் கடும் எச்சரிக்கை!

புதுடில்லி: இளம் தலைமுறையினர் மத்தியில் ராகுல் காந்தியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்த கருத்து, அக்கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் எச்சரித்துள்ளார்.

சசி தரூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இளம் தலைமுறையினரிடம் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், இதற்கான காரணங்களை கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு, ஏற்கனவே உள்ள அரசியல் அமைப்புகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை அரசியல் கட்சிகள் உருவாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இளம் தலைமுறையினருடன் போதிய அளவில் தொடர்பு ஏற்படுத்த முடியாதது குறித்து எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து, சசி தரூரின் கருத்து காங்கிரசுக்கு எதிரான விமர்சனம் அல்ல என்றும், ஊடகங்கள் தனது பேச்சை வேறு விதமாக சித்தரித்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தொடர்பான சசி தரூரின் கருத்து குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சியினர் தங்களது கருத்துகளை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கட்சி விதிகள் மற்றும் ஒழுக்கத்தை எப்போதும் முழுமையாக பின்பற்றவில்லை என்றாலும், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியை குறை கூறும் அல்லது அவரைப் பற்றி எதிர்மறையாக பேசும் கருத்துகள் பா.ஜ.,வுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் வேணுகோபால் கூறினார். அதேநேரத்தில், சசி தரூர் திட்டமிட்டு இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்திருப்பார் என தான் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது போலீசாரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளுக்காக ராகுல் குரல் கொடுத்ததாகவும் வேணுகோபால் தெரிவித்தார். போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை பொதுமக்கள் முன் கொண்டு வந்து அவர்களின் பிரச்னையை வெளிப்படுத்தியதில் ராகுலுக்கு பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனால், இளம் தலைமுறையினருடன் காங்கிரசின் தொடர்பு மற்றும் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை தொடர்பாக கட்சிக்குள் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. சசி தரூரின் கருத்துக்கு கட்சி மேலிடம் அளித்துள்ள பதிலும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 30 நிமிடங்கள் லிஃப்ட்டில் சிக்கிய சசி தரூர்! நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் பரபரப்பு... பத்திரமாய் மீட்ட தீயணைப்புப் படை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share