தலைநகரில் உச்சக்கட்ட பரபரப்பு... தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு... நடந்தது என்ன?
உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் தனது காலணிகளை கழட்டி தலைமை நீதிபதி கவாயை நோக்கி வீச முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்துவதற்காக வழக்கறிஞர் ஒருவர் முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு தற்பொழுது அந்த வழக்கறிஞர் நீதிமன்ற காவலர்களால் வெளியேற்றப்பட்டு, உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்க்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தினம் காலையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. அந்த வழக்கு விசாரணையின் பொழுது வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை நோக்கி அருகே சென்றிருக்கிறார். சென்றிருக்கக்கூடிய நேரத்தில் தனது காலில் இருக்கக்கூடிய காலணியை கழட்டி அவர் மீது வீசுவதற்காக முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
நல்வாய்ப்பாக அருகில் இருக்கக்கூடிய பாதுகாவளர்கள் உடனடியாக அவரை தடுத்ததன் காரணமாக இந்த தாக்குதல் முயற்சி என்பது முறியடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த வழக்கறிஞரை உடனடியாக வெளியே அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி அவரை வெளியேற்றும் போது, ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்டுள்ளார். அவரை கூச்சலை பொருட்படுத்தாமல், நீதிமன்ற பாதுகாவலர்கள் வழக்கறிஞரை வெளியேற்றினர்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு மழை பெய்யுமா? அச்சச்சோ! வெதர்மேன் வெளியிட்ட மெர்சல் அட்டேட்!
உச்ச நீதிமன்றமே இதனால் பரபரப்பான சூழ்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “இது போன்ற விவகாரங்களில் கவனத்தை சிதறடிக்க வேண்டாம். தொடர்ந்து வழக்காடுங்கள். மேலும் இந்த விவகாரங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம். இது போன்ற விஷயங்கள் எந்த சூழலும் தன்னை பாதிக்காது என கூலாக டீல் செய்தார்.
காலணி வீச முயற்சித்த வழக்கறிஞர் அண்மையில உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சனாதன தர்மம் குறித்தான ஒரு பேச்சை பேசியிருந்தார். அந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரியும் வகையில உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடைய அமர்விலேயே அவர் மீது ஒரு தாக்குதல் நடத்த முயற்சி செய்திருக்கிறார். வெளியேற்றக்கூடிய நேரத்தில் சனாதனத்துக்கு ஆதரவான கோஷத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான கோசத்தையும் அவர் முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING "மீண்டும் அமைச்சராக முடியாது"... செந்தில் பாலாஜி வழக்கில் செம்ம ட்விஸ்ட் வைத்த உச்ச நீதிமன்றம்...!