அச்சச்சோ.. என்ன ஆச்சு? திடீரென நின்றுபோன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்…!
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனா, 1996-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர். அவரது குடும்பம் மர்வாரி இந்து பாரம்பரியத்தைச் சேர்ந்தது; தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனா ஒரு ரசாயனப் பொருட்கள் விநியோகஸ்தர், தாய் சுமிதா இல்லத்தரசி. இரண்டு வயதிலேயே, குடும்பம் சாங்லி நகரத்தின் மாதவ்நகர் புறநகருக்கு இடம்பெயர்ந்தது, அங்கு ஸ்மிருதி தனது பள்ளிக் கல்வியைப் பூர்த்தி செய்தார்.
சகோதரர் ஷ்ரேயாஸ் மாவின் மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு, அவருக்கு முதல் உத்வேகமாக அமைந்தது. 2009-ஆம் ஆண்டு, 13 வயதில் இந்திய அண்டர்ஆர்-19 அணியில் அறிமுகமான ஸ்மிருதி, விரைவிலேயே தேசிய அளவிலான நட்சத்திரமாக உயர்ந்தார். 2013-ல் இந்திய மகளிர் அணிக்கு அறிமுகமான அவர், 2016 மற்றும் 2022 ஆசியக் கோப்பைகளிலும், 2025 உலகக் கோப்பையிலும் விளையாடி வெற்றிகளைப் பெற்றார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பிரகாசமான இடது கை துடுப்பாட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, உலகக் கோப்பை வெற்றியின் உச்சத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வருகிறார். தனது காதலன், பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் பலாஷ் முச்சலுடன் திருமணப் பந்தத்தில் இணைவார் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சீர்கெட்டு போன திருப்பூர் மாநகராட்சி... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்... இபிஎஸ் அறிவிப்பு...!
இன்று ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் இன்று நடைபெற இருந்தது. இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசக திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்மிருதி மந்தனா - பலாஸ் முச்சல் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை எதிரொலி... கண்காணிப்பை பலப்படுத்திய அரசு..! மிஸ் ஆகவே கூடாது...!