×
 

சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்யசபாவில் கொதிக்கும் நட்டா! அனல் பறக்கும் வாதம்!

பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ஜெ.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சில காங்கிரஸ் தொண்டர்கள், “பிரதமர் மோடிக்கு கல்லறை தோண்டப்படும், இன்று இல்லையேல் நாளை...” என்று முழக்கமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

இன்று (டிசம்பர் 15) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதையும் படிங்க: ச்சாய்!! ச்சாய் போலேய்!!! சிவப்பு கம்பளத்தில் தேநீர் குவளையுடன் மோடி! பாஜகவை வம்பிழுக்கும் காங்.,!

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான ஜெ.பி. நட்டா, இந்த முழக்கங்களை கடுமையாக கண்டித்தார். “காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக எழுப்பப்பட்ட முழக்கங்கள் மிகவும் வருத்தமளிப்பவை. இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை காட்டுகிறது.

ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதற்கு சோனியா காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், “நேற்று நடந்த வெற்றிகரமான பேரணியால் பா.ஜ.க.வினர் இன்று ஆதாரமற்ற நாடகம் நடத்துகின்றனர். எந்த காங்கிரஸ் தலைவரும் அப்படி பேசவில்லை. பேரணியில் இருந்த சிலர் என்று கூறுகின்றனர். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத முழக்கங்களை நாங்கள் ஏற்பதில்லை. கடந்த வாரம் அமித் ஷா பேசியதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இந்த சர்ச்சை நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: நேரு மீது ராஜ்நாத் சிங் சுமத்திய குற்றச்சாட்டு!! பாஜக மீது பிரியங்க காந்தி பாய்ச்சல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share