×
 

தமிழகத்துக்கு டாடா! ஆந்திராவுக்கு ஆஃபர்! ஜெகா வாங்கிய தென்கொரிய நிறுவனம்! பறிபோன வேலைவாய்ப்புகள்!

தென்கொரியாவை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருந்தது. தற்போது வாபஸ் பெற்று கொண்டு ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல காலணி உற்பத்தி நிறுவனமான வாசவுங், தமிழகத்தில் ரூ.1720 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, ஆந்திர மாநிலம் குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வாசவுங் நிறுவனம் அடிடாஸ் உள்ளிட்ட உலகப் பிரபல பிராண்டுகளுக்கு காலணிகள் சப்ளை செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் தற்போது நிறுவனம் தமிழகத் திட்டத்தை கைவிட்டு விட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபைத் தொகுதியான குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க ஆந்திர அரசுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குப்பத்தில் இரண்டு கிராமங்களில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ஜோடி விளையாட்டுக் காலணிகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பீகாரில் பாஜக வெற்றி பெற திமுகவே காரணம்!! திரைமறைவில் நடந்த வேலைகள்!! புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்!

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “தமிழகம் மற்றும் ஆந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஆந்திராவில் அமைக்க முடிவு செய்தோம். இந்தியா பெரிய இளைஞர் மக்கள்தொகை மற்றும் நல்ல கல்வி முறையைக் கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற பொறியாளர்கள் எங்கள் தொழிலுக்கு முக்கியம். இந்தியாவில் இது எங்கள் முதல் முதலீடு” என்று தெரிவித்துள்ளது.

வாசவுங் நிறுவனம் தென்கொரியா, தைவான், வியட்நாம், இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே இயங்கி வருகிறது. இந்தியாவில் முதல் தொழிற்சாலை குப்பத்தில் அமைய உள்ளது. தமிழகத்தில் முதலீட்டை இழந்தது தொழில் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் முதலீடு ஈர்க்கும் திட்டங்கள் வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கா... அப்படினா? காவல்துறையில் நிர்வாக குளறுபடி... தவெக விளாசல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share