சேலை நெய்வது எப்படி?! நெசவாளர் வீட்டில் முதல்வர்! நெசவு செய்து வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!!
பரமக்குடியில் நெசவாளர் வீட்டிற்குச் சென்ற திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், பரமக்குடியில் நெசவாளர் வீட்டிற்குச் சென்று கைத்தறியில் நெசவு செய்து வாக்கு சேகரித்த காட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சனிக்கிழமை (ஏப்ரல் 11) இரவு பரமக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி நிர்வாகிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதன்பிறகு பரமக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.கே. கதிரவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டார்.
பிரசாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின், பரமக்குடியில் உள்ள ஒரு நெசவாளர் வீட்டிற்குச் சென்றார். அங்கு நெசவாளர் குடும்பத்தினருடன் அன்புடன் கலந்துரையாடினார். நெசவு செய்யும் முறை குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்த முதல்வர், கைத்தறியில் அமர்ந்து சேலை நெசவு செய்தார். இந்த நெசவு செய்யும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: துரைமுருகனின் தேர்தல் சென்டிமெண்ட்!! கடவுள் மறுப்பு கொள்கை Vs நவக்கிரக விநாயகர் வழிபாடு!!
நெசவாளர்களின் கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் கவனமாகக் கேட்டறிந்தார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து தெளிச்சாத்தநல்லூர், காட்டுப்பரமக்குடி, ஓட்டப்பாலம் வழியாக பிரசார வாகனத்தில் பயணித்த முதல்வர், ஐந்து முனை சந்திப்பில் நின்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இங்கு பரமக்குடி (தனி) தொகுதி வேட்பாளர் கே.கே. கதிரவன், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு. மாணிக்கம் ஆகியோருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் முதல்வரின் இந்தப் பிரசாரம் அமைந்துள்ளது. நெசவாளர் வீட்டில் ஸ்டாலின் நெசவு செய்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மக்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பரமக்குடியில் நெசவாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நிகழ்வு, தி.மு.க.வுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வண்டியில உட்காந்துக்கிட்டு கை காட்டுறது இல்ல அரசியல்! விஜயை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!