×
 

நாடு தழுவிய ஸ்ட்ரைக்..! மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு..!

4 புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தத் தொடங்கிய நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிரான கடும் எதிர்ப்பு தொழிலாளர் தரப்பில் தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்த சட்டங்கள், பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நவீனமாக்கப்பட்டவை என்று அரசு கூறினாலும், தொழிற்சங்கங்கள் இவற்றை தொழிலாளர்களுக்கு எதிரானவை, முதலாளிகளுக்கு சாதகமானவை என்று விமர்சித்து வருகின்றன.

இந்த நான்கு சட்டத் தொகுப்புகளும் ஊதிய சட்டம், தொழிலாளர் உறவுகள் சட்டம், சமூகப் பாதுகாப்பு சட்டம், தொழில் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் சட்டம், தொழிலாளர்களின் வேலை நிலைத்தன்மை, வேலை நிறுத்த உரிமை, தொழிற்சங்க அமைக்கும் சுதந்திரம் போன்றவற்றை பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 8 மணி நேர வேலை நேரம் பலவீனமாக்கப்படலாம், முதலாளிகளுக்கு ஊழியர்களை எளிதில் நீக்கும் அதிகாரம் அதிகரிக்கலாம், தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான உரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், வேலை நிறுத்தம் நடத்த 14 நாட்கள் முன்னறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பது, அத்தியாவசிய சேவைகளில் வேலை நிறுத்தம் தடை செய்யப்பட்டிருப்பது போன்ற விதிகள் தொழிலாளர்களின் போராட்ட உரிமையை முடக்குவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த 10 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள் பல உள்ளன.

இதையும் படிங்க: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்..! சேவைகள் பாதிப்பு அபாயம்..!

முதன்மையாக, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே. அதோடு, மின்சார திருத்த சட்ட மசோதா, விதை சட்ட மசோதா, விபி-ஜி ராம் ஜி சட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை மாற்றியமைத்தது) போன்றவற்றையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், பாதுகாப்பு தளவாட தொழிலாளர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்தனர். 

இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் ஸ்ட்ரைக்... மாணவர்களை பாதிக்கும்னு கூட உரைக்கலையா? அண்ணாமலை கொந்தளிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share