#BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை தந்தார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சி.பி. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சிப் பாகுபாடு இன்றி சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் 1946-ல் பிறந்த சுதர்ஷன் ரெட்டி ஆந்திரா ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி 2007 உச்சநீதிமன்ற நீதிபதியானவர் சுதர்சன் ரெட்டி. 2005 இல் கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்சன் 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நான்காண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சுதர்ஷன் ரெடி கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவர் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி தமிழகம் வருகை... யாரை சந்திக்கப் போகிறார் தெரியுமா?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்ட இருப்பதாக கூறப்பட்டது. அதற்காக சுதர்ஷன் ரெட்டி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்த உள்ளார்.
இதையும் படிங்க: தயாரா இருக்கோம்! துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு சித்தாந்த போராட்டம்.. KC வேணுகோபால் பரபரப்பு பேட்டி..!