×
 

அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் அதிகாரிகள் மீது உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தையும் சேர்த்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தெருநாய் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்கள் பாதுகாப்பே முதன்மை என்ற அடிப்படையில், ஆக்ரோஷமாக தாக்கும் நாய்கள் மற்றும் ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தெருநாய்கள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா காலத்தில் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் சரியாக செயல்படாததே இன்றைய மோசமான நிலைக்கு காரணம் என பல தரப்புகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், பொதுமக்கள் அதிகம் கூடும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் அதிகாரிகள் மீது உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகார துஷ்பிரயோகம் அல்லது உள்நோக்கத்துடன் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மாநில அரசுகளின் அலட்சியத்தையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. “சரியான நேரத்தில் கருத்தடை, தடுப்பூசி மற்றும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் இன்று இத்தனை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு ‘Animal Birth Control’ மையம் அமைக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபீஸ் தடுப்பூசி கிடைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றும் தெருநாய்களை அகற்ற வேண்டும் என பல முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது!! அதேசமயம் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்! சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share