×
 

டெல்லி செங்கோட்டையே எங்களுக்குத்தான் சொந்தம்..! முகலாய பேரரசின் கொள்ளுபேரன் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு..!

டெல்லி செங்கோட்டையே எங்களுக்குத்தான் சொந்தம் என முகலாய பேரரசின் கொள்ளுபேரன் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி செங்கோட்டை எங்களுக்குத்தான் சொந்தம், நாங்கள் முறையான வாரிசு என்று முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் கொள்ளுப்பேரன் முகமது பேதர் பக்த் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முகலாயப் பேரரசரின் கடைசி அரசர் பகதூர் ஷா ஜாபர். இவர் 1837 முதல் 1857 வரை ஆட்சியில் இருந்தார். ஆங்கிலேயரின் கிழக்கு இந்தியா கம்பெனி ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பர்மாவுக்கு(மியான்மர்) சென்று அவரின் 87வது வயதில் அங்கேயே இறந்தார்.

இதையும் படிங்க: அமலாக்கப்பிரிவுக்கு கைது அதிகாரம் இருக்கா..? 2 ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்..!

பகதூர் ஷா ஜாபரின் கொள்ளுப்பேரன் முகமது பேதர் பக்த். இவரின் மனைவி சுல்தானா பேகம். 2024, டிசம்பர் 13ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “டெல்லி செங்கோட்டை எங்களுக்குத்தான் சொந்தம். அந்த செங்கோட்டையை எழுப்பியது என் கணவரின் கொள்ளுத் தாத்தாவின் முன்னோர்கள்தான், ஆதலால் அந்த கோட்டைக்கு நாங்களே வாரிசு தாரர்கள். முதலாம் உலகப் போர் முடிந்தபின் ஆங்கிலேயர்கள் எங்களிடம் இருந்த சொத்துக்களை அபகரித்தனர். 

முகலாய வம்சத்தை வெளியேற்றி செங்கோட்டையைக் கைப்பற்றினர். ஆதலால் டெல்லி செங்கோட்டையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது இத்தனை ஆண்டுகள் செங்கோட்டையை வைத்திருந்ததற்காக உரிய இழப்பீட்டை மத்திய அரசு தர உத்தரவிட வேண்டும். 

1960ம் ஆண்டில் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, பகதூர்ஷாவின் வாரிசாக என் கணவரை அங்கீகரித்து அரசியல் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார். அவரின் மறைவுக்குப்பிந் எனக்கு 1980ம் ஆண்டிலிருந்து ஓய்வூதியம் வருகிறது”  என்று தெரிவித்தார். இந்த மனுவை விசாரித்த தனிநீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து “ 150 ஆண்டுகளுக்குப்பின் உரிமை கோருவது எந்தவிதத்திலும் நியாயமல்ல” எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, சுல்தானா பேகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா, “ ஏன் செங்கோட்டை மட்டும் உங்களுக்கு சொந்தம் என்று கூறுகிறீர்கள். ஃபதேபூர் சிக்ரியையும் சேர்த்து உரிமை கொண்டாடவேண்டியதுதானே. அதை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள். இந்த மனு ஒட்டுமொத்தமாக தகுதியற்றது தள்ளுபடி செய்கிறேன்” என தள்ளுபடி செய்தார். 

இதையும் படிங்க: ‘அவங்க கொடுக்குறதும், நீங்க வாங்குறதும் ஈஸிதான்’.. வரி செலுத்துவோருக்குத்தான் சுமை அதிகரிக்கும்.. உச்சநீதிமன்றம் விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share