21 நீதிபதிகளின் சொத்துக்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.. ரூ.120 கோடி வைத்துள்ள நீதிபதி யார்?
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், உச்ச நீதிமன்றம் 21 நீதிபதிகளின் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், உச்ச நீதிமன்றம் 21 நீதிபதிகளின் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 33 நீதிபதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வரும் 13ம் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த சொத்துப்பட்டியல் வெளியாகியுள்ளது. கொலிஜியத்தில் இடம் பெற்றுள்ள 5 நீதிபதிகளின் சொத்துப்பட்டியலும் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் எவ்வாறு நடக்கிறது, உயர் நீதிமன்ற கொலிஜியத்தின் பணி என்ன என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமல்லாமல் மாநில அரசுகளின் பங்கு, தகவல்கள், மத்திய அரசின் தகவல்கள் ஆகியவற்றை வைத்து கொலிஜியம் எவ்வாறு செயல்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டையே எங்களுக்குத்தான் சொந்தம்..! முகலாய பேரரசின் கொள்ளுபேரன் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு..!
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பீலா எம் திரிவேதி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய இரு பெண் நீதிபதிகள் உள்ளனர், இவர்கள் இன்னும் தங்களின் சொத்துப்பட்டியலை வெளியிடவில்லை. நீதிபதி பிஎஸ் நரசிம்மா, கே.வி.விஸ்வநாதன் இருவரும் பார் கவுன்சில் இருந்து நீதிபதியாக வந்தவர்கள். இவர்களின் சொத்துக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, திபங்கர் தத்தா, அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா, அரவிந்த் குமார், பி.கே.மிஸ்ரா, எஸ்.சிஷர்மா, பிபி வராலே, என்.கோடீஸ்வர் சிங், மகாதேவன், ஜோமலாயா பக்சி ஆகியோரின் சொத்துப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
2022 நவம்பர் 9 முதல் 2025 மே 5ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தன் ஒப்புதலுடன் மாநில உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியல், பெயர்கள், அவர்களின் தகுதி,பணி அனுபவம், பரிந்துரை தேதி, நீதித்துறை அறிவிக்கை தேதி, நியமனம் ஆகிய விவரங்களும் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பல பிரிவுகளில் முதலீடுகள், அசையும் சொத்துக்களை வைத்துள்ளார். வைப்பு நிதி, காப்பீடுகள், பங்குகளி்ல் முதலீடுகள், அரசு காப்பீடுகள், பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த வகையில் மட்டும் ரூ.55.75 லட்சம் இருக்கிறது. ரூ.1.77 கோடிக்கு ஜிபிஎப் நிதியும், ஆண்டுக்கு ரூ.29,625 மதிப்பில் எல்ஐசி காப்பீடும் செலுத்துகிறார். ரூ.23.87 லட்சத்துக்கு வங்கியில் வைப்பு நிதியும், ரூ.64.51 லட்சத்துக்கு பிபிஎப் நிதியும், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ரூ.1.39 கோடிக்கு பரஸ்பர நிதித்திட்ட முதலீடுகளும் உள்ளன.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் 250 கிராம் தங்கமும், 2 கிலோ வெள்ளியும் இருக்கிறது. 2015ம் ஆண்டு வாங்கிய மாருதி ஸ்விட் காரும் உள்ளது. இது தவிர பரம்பரையாக வந்த 700 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி, வைரங்கள், முத்துகள், ரூபிகள் ஆகியவை உள்ளன. நீதிபதி கே.வி. விஸ்நாதனுக்கு ரூ.120.96 கோடி சொத்துகள் உள்ளன. ரூ.6.43 கோடிக்கு பரம்பரை சொத்துக்களும், ரூ.1.31 கோடிக்குபிற சொத்துகளும் உள்ளன. இரு டொயோட்டா கார்கலும், 1.450 கிராம் தங்கமும் உள்ளன.
இதையும் படிங்க: அமலாக்கப்பிரிவுக்கு கைது அதிகாரம் இருக்கா..? 2 ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்..!