×
 

மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி: முதல்வர் பதவிக்கு அடிபடும் 2 பெயர்கள்..!! டிக் ஆவப்போவது யார்..??

மேற்கு வங்க தேர்தலில் அமோக வெற்றிக்கு பெரும் மூளையாக செயல்பட்டவர் சுவேந்து அதிகாரி.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமோக வெற்றி பெற்று, திரிணாமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியின் நாயகராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரி அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் திரிணாமூல் தலைவரும், மம்தா பானர்ஜியின் அரசியல் சீடருமான சுவேந்து அதிகாரி, தனது அரசியல் குருவுக்கே எதிராகப் போட்டியிட்டு அவரை தோற்கடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பபனிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அவர், நந்திகிராம் தொகுதியிலும் வெற்றி பெற்றார். இவர் ஒரு துணிச்சலான 'அதிரடி பேட்ஸ்மேன்' என அழைக்கப்படுகிறார். மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்தவர் இவரே.

இதனிடையே, பாஜக மாநிலத் துணைத் தலைவரும், பிரபல ஃபேஷன் டிசைனருமான அக்னிமித்ரா பால் (Agnimitra Paul) அசன்சோல் தெற்கு (அசன்சோல் தக்ஷிண்) தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் தபஸ் பானர்ஜியை சுமார் 40,839 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் அவரது பெயரும் டாக் அடிக்கிறது. பெண் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜகவின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.

இதையும் படிங்க: மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்: பாஜக கூட்டணி அதிரடி முன்னிலை..!! மம்தா பானர்ஜி பின்னடைவு..!!

நாளை (மே 9) கவர்னர் மாளிகைக்குச் சென்று சுவேந்து அதிகாரி, பாஜக மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா மற்றும் தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சல் ஆகியோர் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றி மம்தா பானர்ஜியின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. பாஜகவின் தேசிய தலைமை, மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவை விரைவில் அறிவிக்கும். மேற்கு வங்காள மக்களின் மாற்றத்துக்கான விருப்பத்தை இந்தத் தேர்தல் தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. புதிய அரசு மாநிலத்தின் வளர்ச்சி, தொழில் முதலீடு மற்றும் சட்டம் ஒழுங்கு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 
 

இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்... கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம்... சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share