×
 

டெல்லி அரசியலிலும் சிக்சர் அடித்த விஜய்! அசந்து போன மோடி, அமித்ஷா! தரமான சம்பவம்!

'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்களிலேயே, மிக துல்லியமான காலக்கெடுவுக்குள் எந்தவொரு விஷயமும் விடுபடாமல், தன் உரையை தமிழக முதல்வர் விஜய் பேசி முடித்தது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிடி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசிய விதம் பலரது கவனத்தையும் ஈர்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்ற இந்த கூட்டம், சமீப காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பே அரங்கிற்கு முதலில் வந்த தலைவர்களில் ஒருவராக இருந்த விஜய், அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளதால், அவர்மீது பலரது கவனம் இயல்பாகவே திரும்பியிருந்தது.

கூட்டத்தின் தொடக்கத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும், தேவையெனில் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு விஜய் புன்னகையுடன் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடியில் அதிரடி மாற்றம்... விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் குட்நியூஸ்... !

பின்னர் நடைபெற்ற விவாதங்களில், மற்ற மாநில முதல்வர்களின் உரைகளையும் அவர் கவனமாகக் கேட்டதாகவும், மொழிபெயர்ப்பு ஹெட்போனை பயன்படுத்தாமல் முழு அமர்விலும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிடி ஆயோக் கூட்டங்களில் ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்படும். அந்த நேர வரம்பிற்குள் அனைத்து கருத்துகளையும் தெளிவாக பதிவு செய்வது சவாலான விஷயமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் தனது ஆங்கில உரையை வழங்கப்பட்ட ஐந்து நிமிட காலக்கெடுவுக்குள் துல்லியமாக முடித்ததாக கூறப்படுகிறது. முக்கிய அம்சங்கள் எதையும் விடுபடாமல், நேரத்தை மீறாமல் அவர் பேசியது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இடைவேளைகளின் போது பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்களுடன் விஜய் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. முதல் முறையாக நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், அவரது செயல்பாடுகள் மற்றும் உரை நடை தேசிய அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share