×
 

நான் ரெடியாகிட்டேன்! பழைய மாவை அரைக்கிறார் பழனிசாமி.. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

நான்கு கார்கள் மாறி மாறி சென்று அமித் ஷாவை சந்தித்து கட்சியை அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி சென்றார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பங்கேற்றது ஏன்? பிரதமர் மோடி தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? மக்கள் பிரச்னைகளுக்கு செல்லாமல் இப்போது ஏன் சென்றார் என பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார். மக்கள் நலனின் அக்கறை இருந்திருந்தால் மூன்று ஆண்டுகள் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பார். எதிர்க்கட்சியாக இருந்த போது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்க விட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டிய தி.மு.க., இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறது? 

இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!

உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போல் EDக்கும் பயமில்லை, மோடிக்கும் பயமில்லை என்றால், அந்த தம்பி எதற்காக வெளிநாட்டிற்கு ஓடினார்? தமிழ்நாட்டில் இருந்திருந்தால், பயமில்லை என்று சொல்லிக் கொள்ளலாம். விரைவில் வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பாக வெளியில் வரும். இதுதான் ஆரம்பம்.. விரைவில் யார் எப்படி பயப்படுவார்கள் என்பது தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார். அதில் ஸ்டாலின் கூறி இருப்பதாவது; தமிழகம் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம்.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.கவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழக மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., ஆட்சியே தொடரும். எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் தி.மு.க.,வின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது. மதுரை பொதுக் குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share