ரொம்ப மன உளைச்சலா இருந்துச்சு..! 51 தமிழக மாணவர்கள் ஜலந்தரிலிருந்து மீட்பு..!
போர் பதற்றம் காரணமாக ஜலந்தரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களில் மேலும் 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வந்தாலும் அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.எனவே, ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். நிலைமை சற்று சீரானதும் தமிழக மாணவர்களை அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அயலக தமிழர் நல வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பஞ்சாப் மாநில கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பத்திரமாக அமைக்கப்பட்ட தமிழக இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக மாணவர்கள் 31 பேர் ஜலந்தரில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக மாணவர்களை தமிழக அரசு டெல்லி அழைத்து வந்துள்ளது.
இதையும் படிங்க: எம் மக்களை கொன்ற பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பீர்களா? போர் தணிந்து விடுமா? உமர் அப்துல்லா சரமாரி கேள்வி...
விரைவில் அவர்கள் சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே 12 மாணவர்கள் வைக்கப்பட்ட நிலையில் மேலும் 39 மாணவர்களை தமிழக அரசு மீட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய தமிழக மாணவர்கள், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை நேரில் கண்டதாகவும், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர். ஆனால் தங்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டதாகவும், சிறந்த முறையில் தங்களை பார்த்துக் கொண்டதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: இந்தியா மீது ஓயாமல் ட்ரோன் தாக்குதல்.. பாகிஸ்தானின் ட்ரோன் ஏவுதளத்தை துவம்சம் செய்து அழித்த இந்தியா!