நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் குப்பைக்கு போகும்... தேஜஸ்வி யாதவ் திட்டவட்டம்...!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் குப்பையில் வீசப்படும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக உள்ளார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன். பீகார அரசியலின் இளம் முகமாக உருவெடுத்த இவர், 2015ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரகோபூர் தொகுதியில் இருந்து அரசியல் அரங்கில் இறங்கினார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் மகாகத்பந்தன் தலைவராக செயல்பட்டு, தனது கட்சியை வலுப்படுத்தினார். அப்போது அவர் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் 2022ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் கூட்டணி மாற்றத்தால் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: பரபரக்கும் பீகார் தேர்தல் களம்... முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், நாட்டின் வகுப்புவாத சக்திகள் உடன் லாலு பிரசாத் யாதவ் சமரசம் செய்து கொண்டதே கிடையாது என்றும் ஆனால் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அதுபோன்ற சக்திகளுக்கு தான் எப்போதும் ஆதரவாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார். அவரால்தான் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பீகார் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பை பரப்புவதாகவும், பாஜகவை இந்தியாவை எரிக்கும் கட்சி என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா கூட்டணி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், வக்பு வாரிய சட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவும் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: பரபரக்கும் பீகார் தேர்தல் களம்... முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!