அரசு ஊழியருக்கு ரூ.100 கோடிக்கு சொத்து... அள்ள, அள்ள கட்டுக்கட்டாய் பணம், 18 ஏக்கர் நிலம், 3 பிளாட், பீரோவில் தங்க நகை குவியல்...!
தண்ணீர் டேங்கர்களை விற்பனை செய்து ஒரு நாளைக்கு ரூ. 50,000 வசூலித்து பெரும் சொத்துக்களைக் சேர்த்த அனந்த் லட்சுமி குமார்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நீர் வாரிய பொது மேலாளர் அனந்தலட்சுமி குமார் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை ரூ. 100 கோடி சொத்துக்கள் கண்டுபிடிப்பு. இரண்டு கிலோ தங்கம், ஒன்பது கிலோ வெள்ளி, பணக்கட்டுகள், ஆடம்பரமான வீடுகள், விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஏக்கர் கணக்கான நிலம் முடக்கம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் ரெட் ஹில்ஸ் பிரிவின் பொது மேலாளர் எஸ். அனந்த் லட்சுமி குமார் தனது பதவியைப் பயன்படுத்தி, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தலா ரூ. 5,000-க்கு சட்டவிரோதமாக பெற்று தண்ணீர் டேங்கர்களை விற்பனை செய்து வந்ததாகவும் இந்த மோசடி மூலம் அவர் ஒரு நாளைக்கு ரூ. 50,000 வசூலித்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை இயக்குநர் சாருசின்ஹா தலைமையில் டிஎஸ்பி மஜித் அலி தலைமையில் ஐதராபாத்தில் உள்ள லட்சுமி குமாரின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட எட்டு இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு குழுக்கள் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தின.காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இதையும் படிங்க: யார் முதல் பெண் அமைச்சர்..? Instagram, வாட்ஸ் அப்பை நம்பாதீங்க..! MP கனிமொழி அறிவுறுத்தல்..!
இதில் மல்லாபூரில் உள்ள அனந்தலட்சுமி குமாரின் வீட்டிலும், அவரது நண்பர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகளிலும் நடந்த சோதனையில் பெரும் பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பணத்தை எண்ணுவதற்காக பண எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. முதற்கட்ட தகவல்களின்படி, லட்சுமி குமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளது கண்டறியப்பட்டது. மல்லாபூரில் உள்ள லட்சுமி குமாரின் வீட்டில் இருந்து சுமார் ரூ. 1.10 கோடி ரொக்கம், 2.1 கிலோ தங்க நகைகள் மற்றும் 9.2 கிலோ வெள்ளிப் பொருட்களை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
மேலும், லட்சுமி குமாரின் மனைவியின் பெயரில் இருந்த வங்கி லாக்கர்களையும் அதிகாரிகள் கண்டறிந்து வங்கிக்கு அழைத்துச் சென்று அவற்றைத் திறந்து பார்த்தனர்.அந்த லாக்கர்களில் இருந்து மதிப்புமிக்க சொத்து ஆவணங்களும் சில தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள நிஜாமாபாத் மற்றும் சங்கரெட்டியில் உள்ள முக்கிய கேடட் கம்யூனிட்டி வீட்டுவசதித் திட்டங்களில் அனந்தலட்சுமி குமார் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள், ஆறு வீட்டு மனைகள், ஒரு ஆடம்பர வீடு மற்றும் 18 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவற்றை வாங்கியுள்ளதை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அவரது வீட்டில் ஒரு மாருதி ரிட்ஸ் காரும், ஒரு பஜாஜ் மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டன. பதிவு ஆவணங்களின்படி, ஊழல் தடுப்புப் பிரிவால் அடையாளம் காணப்பட்ட அனந்தலட்சுமி குமாரின் சொத்துக்களின் மதிப்பு ரூ. 5,88,55,490 ஆகும். ஆனால், சொத்துக்களின் சந்தை மதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகம் என்று அனந்தலட்சுமி குமாருக்கு பினாமியாக இருந்த சில உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், வங்கி லாக்கர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 1064 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்குமாறு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்!! போர் விரைவில் முடிவுக்கு வரும்!! ட்ரம்ப் சூசகம்!