×
 

இந்த 3 நாட்களுக்கு கிடையாது... திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300  சிறப்பு  தரிசன டிக்கெட் மூன்று நாட்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300  சிறப்பு  தரிசன டிக்கெட் மூன்று நாட்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களால் டிசம்பர் 29, 30 மற்றும் 31 (வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல்  தரிசனம்) காரணமாக இந்த தேதிகளுக்கான ரூ. 300  சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி வி.ஐ.பி. தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நிர்வாகக் காரணங்களால் வெளியிடப்படாது.

இதையும் படிங்க: ரூ.120 கோடியைக் கடந்த உண்டியல் காணிக்கை... திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுத்த பக்தர்கள்...!

இந்த டிக்கெட்டுகளை வெளியிடுவதற்கான திருத்தப்பட்ட அட்டவணையை தேவஸ்தான விரைவில் தனித்தனியாக அறிவிக்கும். எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பைக்கில் இருந்து கீழே விழுந்தவருக்கு உதவியவருக்கு இப்படியொரு நிலையா? - உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share