×
 

நெஞ்சே பதறுதே... லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் நிகழ்விடத்திலேயே மூன்று பேர் பலி ஐந்து பேர் படுகாயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விடவும் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் என்பதால் திருப்பதி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம், குறிப்பாக ஆடி வெள்ளிகளில் அம்மன் கோயிலுக்கு செல்ல விரும்புவோரைப் போலவே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வோரும் உண்டு. மேலும் இன்று சனிக்கிழமை என்பதால் ஏழுமலையானுக்கு உகந்த இந்நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அப்படி ஏழுமலையானை தரிசிப்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்ற குடும்பத்தினர் எதிர்பாராதவிதமாக நேர்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த துரதிஷ்டவசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம் மச்சவரம் மண்டலத்தின் கோத்த கணேசுனிபாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், துபான் காரில் நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். இந்த கார், நெல்லூர் மாவட்டம் உலவபாடு மண்டலத்தில் உள்ள சாகோலு அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் விளைவாக, எதிரே வந்த லாரியுடன் வாகனம் மோதியது.

இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி.. அசுர வேகத்தில் பைக் மீது ஏறி இறங்கிய சரக்கு வாகனம்.. 3 இளைஞர்கள் உடல் நசுங்கி பலி..!

இந்தப் பயங்கர விபத்தில், நம்புலா வெங்கட நரசம்மா (55), நம்புலா சுபாஷினி (30), மற்றும் அபிராம் (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக நெல்லூருக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரத்தில் டிரைவருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் ஆரம்பக் கணிப்பில் தெரிவித்தனர்.

விபத்தால் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க, மோதி சேதமான வாகனத்தை கிரேன் மூலம் சாலையோரம் அகற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து, திருப்பதி தரிசனம் செல்லும் பயணத்தின் நடுவே நிகழ்ந்ததால், அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: சீனாவில் அறுந்து விழுந்த தொங்குப்பாலம்.. 5 பேர் பலி.. 24 பேர் படுகாயம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share