தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி தே.ஜ.கூ. ஜெயிக்கணும்.. எல்லோரும் ஓரணியில் இணையணும்.. இது நயினார் அழைப்பு!
தமிழகத்தில் காலனி என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். அதேபோல, பல நல்ல விஷயங்களை அரசு செய்ய வேண்டும்.
திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் இணைய வேண்டும். அப்படிச் சேர்ந்தால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். டெல்லியில் கட்சித் தலைவர்கள், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது, தமிழகத்தில் கட்சி மற்றும் பூத் கமிட்டிகளைப் பலப்படுத்தி, கூட்டணியைச் சுமூகமான சூழலில் கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை. நீதிமன்ற அறிவுறுத்தலைக் கேட்டு, அமைச்சர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பது என்பது சரியான செயல்பாடாக இருக்கும். நமது நாட்டிலேயே இருந்துகொண்டு இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேச துரோக செயல் ஆகும். அவர்களைத் தேச விரோதிகள் என்றுதான் சொல்ல முடியும். தமிழகத்தில் காலனி என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். அதேபோல, பல நல்ல விஷயங்களை அரசு செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிவிட்டு, 50 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கஞ்சா புழக்கம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்." என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்!
இதையும் படிங்க: 93 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி அடித்த சிக்ஸர்.. துள்ளிக் குதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!