இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து.. அடுத்தது என்ன? பியூஷ் கோயலுடன் முக்கிய ஆலோசனை!
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்களுக்கு இன்று காலை தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் இன்று காலை முக்கிய அரசியல் மையமாக மாறியுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக உயர்மட்டத் தலைவர்களுக்கு இன்று காலை எடப்பாடியார் தனது இல்லத்தில் சிறப்பான விருந்து அளிக்கிறார். வெறும் உபசரிப்பாகத் தொடங்கிய இந்தச் சந்திப்பு, தற்போது 2026 தேர்தலுக்கான முக்கிய வியூகங்களை வகுக்கும் களமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சந்திப்பில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை (ஜனவரி 23) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள உள்ளனர். அதற்கு முன்னதாக, இன்று நடக்கும் இந்த விருந்து மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்களில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, யாருக்கு எந்தத் தொகுதி, யாருக்கு எத்தனை இடங்கள் என்பதில் நிலவும் சஸ்பென்ஸ் இன்று உடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பானது வெறும் காலை உணவுடன் முடிந்துவிடாமல், திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான தேர்தல் வியூகங்களை வகுக்கும் ஒரு முக்கியக் களமாகப் பார்க்கப்படுகிறது. பாஜக மேலிடப் பொறுப்பாளர்களின் இந்த சென்னை விசிட் மற்றும் எடப்பாடியார் இல்லச் சந்திப்பு, தமிழக தேர்தல் அரசியலில் ஒரு மிகப்பெரிய முக்கிய திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!
இதையும் படிங்க: அதிமுக-பாஜக வெற்றிக்கு உழைப்போம்; "தவெக கட்சியே கிடையாது!" – விஜய்யை வெளுத்து வாங்கிய சரத்குமார்!