×
 

பாக்.-ல் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி.. இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரங்கள் தெரியுமா?

இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஜமானி என்ற அபு சயியுல்லா என்பவன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. 

இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இதையும் படிங்க: பாக்., துருக்கி ட்ரோன்களை அழித்த இந்தியாவின் D4 கருவி.. வியந்துபோன அமெரிக்க போர் நிபுணர்.!!

எனினும் இன்னமும் ஆப்ரேஷன் சிந்தூர் முடிவடைய வில்லை. பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஜமானி என்ற அபு சயியுல்லா என்பவன் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் சைஃபுல்லா காலித் Saifullah Khalid  அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளான். இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு சைஃபுல்லா மூளையாக செயல்பட்டவன். 2005ல் பெங்களூருவில் ISC எனப்படும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மீதான தாக்குதல், 2006ல் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீதான தாக்குதல், 2008ல் ராம்பூரில் நடந்த சிஆர்பிஎப் முகாம் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் சைஃபுல்லா முக்கிய சதிகாரனாக இருந்தான். 

வினோத்குமார் என்ற புனைப்பெயரில் நேபாளத்தில் போலி அடையாளத்துடன் பல ஆண்டுகள் வசித்த சைஃபுல்லா, நக்மா பானு என்ற உள்ளூர் பெண்ணை மணந்தான். நேபாளத்தில் இருந்தபடியே, லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, தளவாடங்கள் சப்ளை போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தான். 

சமீபத்தில்தான் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குடியேறி இருக்கிறான். அங்கு அந்நாட்டு அரசின் பாதுகாப்புடன்,  லஷ்கரே தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா அமைப்புகளின் பயங்கரவாத செயல்களுக்கு ஆள்சேர்த்தல் மற்றும் நிதி திரட்டும் வேலைகளை செய்து வந்த நிலையில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளான். சிந்து மகாணம் பிடின் மாவட்டம் மத்லி பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற கலீதை பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: நல்லெண்ண எம்.பி.க்கள் குழு.. மலிவான அரசியல் விளையாட்டில் பாஜக.. புட்டுப் புட்டு வைத்த காங்கிரஸ்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share