×
 

ட்ரம்ப் பதவிக்காலம் முடியட்டும்?! பார்த்துக்கலாம்?! மோடி போடும் ஸ்கெட்ச்! பணிந்தது அமெரிக்கா!

அதிபர் டிரம்ப்பின் பதவி காலம் முடியும் வரை காத்திருக்க தயார் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்த பிறகே, இந்தியா மீதான வரியை குறைக்க டிரம்ப் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரை வரி உயர்த்தி மிரட்டிய நிலையில், இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. 

ஆனால் இந்தியா அதை புறக்கணித்து ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து முடித்தது. கனடா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டிரம்ப் இந்திய பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்த உறுதியளித்ததாகவும் அவர் கூறினார். இதை அமெரிக்கர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக டிரம்ப் சித்தரித்தார். ஆனால் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இதற்கு மாறான தகவலை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை வடக்கு தொகுதியில் போட்டியா..?? வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பளீச் பேட்டி..!!

2025 செப்டம்பரில் நடந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் தெளிவாகக் கூறியதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது: வரி அச்சுறுத்தலுக்கு பணியாமல், டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க இந்தியா தயாராக உள்ளது. இதை உணர்ந்தே டிரம்ப் வரியை குறைத்து அறிவித்தார் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிரதமர் மோடி இந்த வரிகுறைப்புக்கு நன்றி தெரிவித்து எக்ஸில் பதிவிட்டார். ஆனால் வர்த்தக ஒப்பந்தம், ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் குறைப்பு, அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு போன்ற எந்த விவகாரத்திலும் கருத்து தெரிவிக்கவில்லை. இது இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது.

கடந்த காலங்களில் பல அமெரிக்க அதிபர்களின் அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. டிரம்பின் வரி மிரட்டலையும் இந்தியா அடிபணியவில்லை என்று ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகவும் உறுதியாக இருப்பதை இது காட்டுகிறது. ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை வலுப்படுத்தி வரும் இந்தியா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த அழுத்தத்துக்கும் தலையசைக்காது என்று தெளிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் வெளியுறவு உத்தியில் பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததே வரி குறைப்புக்கு வழிவகுத்தது என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: பொய் பேசுறத நிறுத்துங்க! உங்க அண்ணன்கிட்ட கேளுங்க! கனிமொழிக்கு அண்ணாமலை அதிரடி ரிப்ளை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share