×
 

அமெரிக்க வேலைக்கும் வச்சாச்சு ஆப்பு! ட்ரம்ப் அறிவிப்பால் சிக்கல்! இந்தியர்கள், பிற நாட்டவர்கள் சோகம்!

வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதியை தானாக நீட்டிப்பு செய்யும் முறையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் (EAD - Employment Authorization Document) தானாக நீட்டிக்கப்படும் முறையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை (DHS) நிறுத்தியுள்ளது. இந்த முடிவு அக்டோபர் 30, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 

இதன் காரணமாக, இந்தியர்கள் உட்பட சீனா, மெக்ஸிகோ, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். டிரம்ப் அரசின் "அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை" கொள்கையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான தடாலடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். "புரோடெக்டிங் தி அமெரிக்கன் பீப்பிள் அகெயின்ஸ்ட் இன்வேஷன்" (Executive Order 14159) மற்றும் "புரோடெக்டிங் தி யூ.எஸ். ஃப்ரம் ஃபாரின் டெரரிஸ்ட்ஸ்" (Executive Order 14161) என்ற அவசர உத்தரவுகள் வழங்கி, அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கும் H-1B, L-1, H-4 (H-1B துணைவர்) போன்ற விசாக்கள் உள்ளவர்களுக்கான EAD தானாக நீட்டிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என் சாக்லெட்டை திருடிட்டாங்க! அழுது ஒப்பாரி வைக்கும் ட்ரம்ப்! வெளிநாட்டு சினிமாவுக்கு 100% வரி!

முந்தைய பைடன் அரசின் நிர்வாகத்தில், EAD காலாவதியான பிறகு கூடுதலாக 540 நாட்கள் (சுமார் 18 மாதங்கள்) வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இது 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2024 இறுதியில் முழுமையாக அமலுக்கு வந்தது. இந்த முறை, USCIS (U.S. Citizenship and Immigration Services) புதுப்பிப்பு விண்ணப்பங்களை செயலாக்குவதில் ஏற்படும் தாமதத்தை (6-12 மாதங்கள்) சமாளிக்க உதவியது. 

ஆனால், இப்போது இந்த தானியங்கி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. EAD புதுப்பிப்புக்கு விண்ணப்பித்தவர்கள், அவர்களின் அனுமதி ஆவணம் காலாவதியானவுடன் வேலை செய்ய தடை செய்யப்படுவார்கள். புதிய EAD அட்டை வழங்கப்படுவத வரை (பொதுவாக 6-12 மாதங்கள்) அவர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்ட இடைக்கால இறுதி விதிமுறை (Interim Final Rule - IFR) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: "அக்டோபர் 30, 2025 மற்றும் அதற்குப் பிறகு EAD புதுப்பிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, இனி தானியங்கி மூலம் நீட்டிப்பு வழங்கப்படாது. 

பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கும் வகையில், வெளிநாட்டவர்களின் அடையாள் சரிபார்ப்பு, பின்னணி தணிக்கை மற்றும் மோசடி தடுப்பை அரசு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது." இந்த விதிமுறை, அக்டோபர் 30க்கு முன் விண்ணப்பித்தவர்களை பாதிக்காது. 

TPS (Temporary Protected Status) போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. USCIS இயக்குநர் ஜோசஃப் எட்லோ கூறுகையில், "முந்தைய அரசின் கொள்கைகள் வெளிநாட்டவர்களின் வசதிக்காக அமெரிக்க பாதுகாப்பை புறக்கணித்தன. இது அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் சாதாரண நடவடிக்கை" என்றார்.

இந்த முடிவால், ஆண்டுக்கு 2.93 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை EAD புதுப்பிப்பு விண்ணப்பங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக, அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் H-1B விசாவில் வேலை செய்கின்றனர். அவர்களில் பலர் IT, ஹெல்த்கேர், இன்ஜினியரிங் துறைகளில் பணியாற்றுகின்றனர். H-4 EAD உள்ள துணைவர் மற்றும் பச்சை அட்டை (Green Card) விண்ணப்பித்தவர்கள் (AOS) அதிகம் பாதிக்கப்படுவார்கள். 

"இது சட்டப்பூர்வ குடியேறிகளை தண்டிக்கிறது" என்று குடியேற்ற சட்ட வழக்கறிஞர் எலிசா டாப் விமர்சித்துள்ளார். இந்திய அமெரிக்க சங்கங்கள் (USINPAC) போன்ற அமைப்புகள், இந்திய அரசிடம் இது குறித்து தலையிடக் கோரியுள்ளன. இது இந்தியர்களுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

டிரம்பின் முதல் ஆட்சியில் (2017-2021) H-1B விசா இறுதிப் பரிசீலனா (Final Action Dates) நீட்டிக்கப்பட்டது, இதனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்தனர். இப்போது EAD நீட்டிப்பு நிறுத்தம், அவர்களின் தொழில் வாழ்க்கையை மீண்டும் அச்சுறுத்துகிறது.

 இந்தியாவைச் சேர்ந்த IT நிறுவனங்கள் (TCS, Infosys, Wipro) போன்றவை தங்கள் ஊழியர்களுக்கு புதிய உத்திகளை அறிவுறுத்தி வருகின்றன. விண்ணப்பங்களை 180 நாட்களுக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் என்று USCIS அறிவுறுத்துகிறது. இல்லையெனில், வேலை இடைவெளி ஏற்படும்.

டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் என்று அரசு கூறினாலும், குடியேற்றவாதிகள் இதை "மோசடி தடுப்பு" என்று வரவேற்கின்றனர். 

ஆனால், சர்வதேச அமைப்புகள் இதை "குடியேற்றத் தொழிலாளர்களுக்கு அநீதி" என்று விமர்சிக்கின்றன. இந்திய அரசு இதைப் பற்றி USCIS-ஐ அணுகி, விரிவான விளக்கம் கோரியுள்ளது. இந்த முடிவு, அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் களமாக மாறிய பசும்பொன்... ஓபிஎஸ்-செங்கோட்டையன் பயணம்! இபிஎஸ் தடாலடி பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share